முகப்பருவை காரணம் காட்டி நீக்கிய சீரியலுக்கு மீண்டும் வந்த தீபிகா – Comeback குறித்து அவர் போட்ட பதிவு.

0
444
deepika
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதிலும் இந்த தொடரில் அடுத்தடுத்து நடிகைகள் கர்ப்பமாகி வருவதை கேலி செய்து இந்த தொடரை வந்தியன் ஸ்டோர்ஸ் என்றெல்லாம் கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இது குறித்து தன்னுடைய மின்சாரம் பக்கத்தில் அறிவித்துள்ளார் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து நான் விலகி விட்டது உண்மைதான் இதற்கு மேலும் ஐஸ்வர்யா ராய் பாத்திரத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை இனிவரும் கதை எனக்கும் என்னுடைய தவிலுக்கும் ஏற்படுவதாக இல்லை இந்த பயணத்தில் என்னை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி மேலும் என்னுடைய முடிவை மதித்து ஏற்றுக் கொண்ட விஜய் டிவிக்கும் நன்றி

- Advertisement -

ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சீரியல் நடிகை வைஷாலி தணிகா தான் நடித்து வந்தார். ஆனால், அவர் நடித்த சில மாதங்களிலேயே அவர் மாற்றப்பட்டு தீபிகா என்பவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார். இவருக்கும் கண்ணனுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இவரையும் திடீரென்று சீரியலில் இருந்து நீக்கி விட்டார்கள் தீபிகாவிற்கு அதிகமான முகப்பரு பிரச்சனை இருந்ததால் இந்த சீரியல் இருந்து அவர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.

இதுகுறித்து பேசி அவர் மேக்கப் போட்டதால் தான் என்னுடைய முகப்பருக்கள் அதிகமானது. எனக்கு இந்த பிரச்சினை இருப்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் மேலும், இதை சரி செய்ய எனக்கு நேரமும் கொடுத்தார்கள். நான் நன்றாக நடக்க வில்லையா இல்லை ? படக் குழுவில் ஏதாவது பிரச்சினை செய்தேனா? அப்படி ஏதாவது செய்து என்னை வெளியேற்று இருந்தால் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால், முகப்பரு இருப்பது என்னுடைய தவறு இல்லையே முகம் என்றால் முகப்பரு வரும்தானே ?

-விளம்பரம்-

அதனால் நான் சேனலையும் தவறு சொல்லமாட்டேன் அவர்களும் எனக்கு இதை சரி செய்ய நேரம் கொடுத்தார்கள். ஆனால். அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் என்னால் இதை சரி செய்ய முடியவில்லை என்பதால்தான் சீரியல் இருந்து விலக வேண்டியதாக ஆகிவிட்டது என்று வருத்தமுடன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் இந்த தொடரில் திரும்பியுள்ள தீபா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அதில் ‘ எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான் சொல்லப் போறேன்…`ஒரு பொருள் நம்மகிட்ட இல்லாத போதுதான் அதோட வலி என்னன்னு நமக்குத் தெரியும்’. எனக்கும் நிறையவே புரிஞ்சது… நல்லாவே தெரிஞ்சது! இப்ப அது திரும்ப கிடைச்சிருக்கு. அதனால அதோட மதிப்பு எனக்கு நல்லாவே தெரியும்.இவ்ளோ நாள் எனக்காக ஃபீல் பண்ணவங்களுக்கும், இப்போ எனக்கு வாழ்த்துகள் சொல்றவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!  தீபிகாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் உங்களுடைய சப்போர்ட், வாழ்த்துகள் எப்பவும் வேணும்! அன்பே சிவம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement