புதிய காரை வாங்கி தனது மகனை கெத்தாக கூட்டி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா. குவியும் வாழ்த்துக்கள்.

0
642
hema
- Advertisement -

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலை வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி வடிநம்மா என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும், பாக்கியலட்சுமி குடும்பமும் சேர்ந்து மெகா சங்கமம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

மெகா சங்கமம்:

பாக்யா மாமனாரின் 75வது பிறந்த நாளை கொண்டாட இரு குடும்பங்களும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். தற்போது சீரியல் கலகலப்பாகவும், விறுவிறுப்புடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த வார இறுதியில் மெகா சங்கம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமா புதிய கார் வாங்கி உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா.

ஹேமா பற்றிய தகவல்:

இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருந்தார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி இருந்தார். பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார்.

-விளம்பரம்-

ஹேமா நடித்த சீரியல்கள்:

இதை தொடர்ந்து இவர் சீரியலில் மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஜீவா-மீனா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்று வருகிறது.

ஹேமா வாங்கிய புது கார்:

மேலும், இவர் சீரியலில் காமெடி, வில்லி, நல்லவர் என மூன்றும் கலந்த கலவையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கிற்கு மீனா கதாபாத்திரமும் முக்கியம் என்று சொல்லலாம். இந்த நிலையில் ஹேமா புதிய கார் வாங்கி இருக்கிறார். நடிகை ஹேமா தன் குடும்பத்துடன் கார் ஷோரூக்கு சென்று புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஹேமாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement