பாடையில் இருந்தது லட்சுமி அம்மாவே இல்லையாம் – ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மீனா வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.

0
8399
pandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. 3 வருடங்களுக்கு மேலாக இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றும் விறுவிறுப்பும், சலிப்பும் இல்லாமல் இந்த தொடர் சென்று கொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்ட கதை.

-விளம்பரம்-

மூர்த்தி என்பவர் தான் குடும்பத்திற்கு பெரிய அண்ணன். மூர்த்தி மற்றும் அவர்களின் சகோதர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் லக்ஷ்மி அம்மாள். தற்போது இந்த சீரியலில் லட்சுமி அம்மாள் இறப்பது போன்ற காட்சி காட்டப்பட்டுள்ளது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி படபிடிப்பில் நடக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவார்கள்.

இதையும் பாருங்க : 18 வயதிலேயே நீச்சல் உடை – தன் முதல் படத்திலேயே கிளாமர் குயினாக இருந்துள்ள மும்தாஜ்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது லக்ஷ்மி அம்மாள் நடித்த இறந்த காட்சிகள் டூப் போட்டு எடுத்ததற்கான வீடியோவை நடிகை ஹேமா வெளியிட்டு உள்ளார். இந்த தொடரில் இரண்டாவது மருமகளாக மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை ஹேமா. ஆரம்பத்தில் இவர் சீரியலில் வில்லியாக இருந்தாலும் தற்போது குடும்பத்துடன் ஒன்றி வாழ ஆரம்பித்துவிட்டார். மேலும், அந்த வீடியோவில் நடிகை லட்சுமி அம்மாள் இறந்த காட்சிகள் எடுக்கப்பட்டபோது லட்சுமி அம்மாவின் டூப் போட்டு கொண்டுவந்த பொம்மையை தான் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதோடு வீடியோவில் ஹேமா அவர்கள் கூறியது, இந்த சீரியலில் மூன்று வருடமாக ஷீலா அம்மாவுடன் நான் பணி புரிந்திருக்கிறேன். ஷீலா அம்மா தன்னுடன் இல்லாதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று பதிவு செய்துள்ளார். தற்போது நடிகை மீனா பதிவிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பல பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.இந்த சீரியல் இருந்து விலகுவது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சமீபத்தில் ஷீலா பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement