நயனை போல மாறி நெற்றிக்கண் வசனத்தை பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை. வீடியோ இதோ.

0
2660
kavya

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. ஆனால், சினிமா தலைப்பை டைட்டிலாக வைக்காமல் வெற்றி பெற்ற சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

இந்த தொடரில் பல ஜோடிகள் நடித்து வந்தாலும் கதிர் முல்லை கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது. இதில் முல்லையாக நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். இவரது நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

- Advertisement -

இருந்தாலும் இவருக்கும் சித்ரா அளவிற்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். அதே போல அம்மணி பல ரீல்ஸ் வீடியோகளை வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் நயன்தாராவின் பல வசனங்களை ரீல்ஸ்ஸாக செய்து வெளியிட்டு வருகிறார்.

நடிகை காவ்யாவை பலரும் குட்டி நயந்தாரா என்று கூறி உசுப்பேத்தி வந்ததால், அம்மணியும் அடிக்கடி நயந்தாராவின் வசனங்களை ரீலிஸ்ஸாக செய்து வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம்பெற்ற வசனங்களை நயன்தாராவை போலவே கண்ணில் லென்ஸ் எல்லாம் வைத்து ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement