காவ்யாவை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இருந்து கதிரும் வெளியேறுகிறாரா ? இது தான் காரணமா ?

0
657
kumaran
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியலில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் நடித்து வருகிறார். இதற்கு முன்பு சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சிறந்த டான்ஸரும் ஆவார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். மேலும் இவர் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான எஸ் ஜே சூர்யாவின் வதந்தி என்ற ஓடிடி தொடரின் நடித்திருந்தார் கதிர். இந்த இனைய தொடர் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கதாநாயகனாக கதிர் நடிக்கும் வெப் சீரிஸ் :

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் ஹிந்தி மொழியில் பிரபலமான ஹாங்கமா ஓடிடி நிறுவனம் தற்போது தமிழில் முதல் முறையாக “மாயத்தோட்ட” என்ற தொடரை வெளியிட்டுள்ளது மொத்தம் ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரை சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் என பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் கதாநாயகனான கதிர் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

கதிர் பேட்டி :

அவர் கூறுகையில் “இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்த “வதந்தி” தொடரில் நான் நடித்து எனக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து. சினிமாவை நோக்கி பல காலமாக நான் பயணித்து கொண்டிருந்தேன். ஆனால் முன்பு இருந்ததை போல இல்லாமல் தற்போது சினிமா முற்றிலுமாக மாறிவிட்டது. இதனை பார்த்த எனக்கு வெப் சீரிஸ் கூட நன்றாக இருக்கிறது என தோன்றியது. நான் “வதந்தி” தொடரில் நடித்ததை பார்த்துதான் என்னை “மாய தோட்ட” தொடருக்கு நடிக்க அழைத்தார்கள்.

-விளம்பரம்-

நடிக்கும் பதாபத்திரம் :

இந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் “இசட் பிரிவில்” வரும் தலைமை அதிகாரி அதனால் என்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மற்ற வேண்டியிருந்தது. நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லுங்கியுடன் வருவேன் ஆனால் இந்த தொடரில் பலவிதமான மாறுதல்கள் தேவை பட்டது. அதே போல நான் “வதந்தி” தொடரின் போது கொஞ்சம் எடை போட வேண்டி இருந்தது. ஆனால் இந்த தொடருக்காக அதனை குறைத்து வருகிறேன்.

நான் இந்த “மாய தோட்ட” வெப் சீரிஸில் நடிப்பதற்காக “இசட் பிரிவு” என்றால் என்ன? அவர்களில் வேலை என்ன? அவர்களை எதற்காக உருவாக்கினார்கள்? அவர்கள் எப்படி ஆயிதங்களை பயன்படுத்துவார்கள் முதற்கொண்டு அனைத்தையும் நான் ஒவ்வொரு விஷயமாக தேடி கற்றுக்கொண்டேன். ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை கண்டிப்பாக மக்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

Advertisement