பாடையில் படுப்பதுபோல் நடித்தால் பரிகாரம். லஷ்மி அம்மாவிற்கு நடந்த விசித்திரமான செயல பாருங்க.

0
2214
- Advertisement -

பொதுவாகவே சின்னத்திரையிலோ,வெள்ளித்திரையிலோ நடிகர்கள் பாடையில் படுத்து நடிப்பது போன்ற காட்சிகள் வந்தால் அவர்களுக்கு பரிகாரம் செய்வார்களாம். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் நடிகை லட்சுமி அம்மாவிற்கு விசித்திரமாக செயல் ஒன்று செய்து உள்ளார்கள். தற்போது இந்த நியூஸ் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இன்றும் விறுவிறுப்பு குறையாமல் போய்க்கொண்டிருக்கும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று.

-விளம்பரம்-
pandian-stores-cinemapettai9

சோசியல் மீடியாவில் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்ட கதை. மூர்த்தி என்பவர் தான் குடும்பத்திற்கு பெரிய அண்ணன். மூர்த்தி மற்றும் அவர்களின் சகோதர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் லக்ஷ்மி அம்மாள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷீலாவின் கதாபாத்திரம் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

சீரியலில் நடிகை ஷீலா அவர்கள் இறந்தது போன்ற காட்சிகளில் நடித்து இருந்தார். மேலும், ஷீலா அவர்கள் படையில் படுப்பது போலவும், இறந்த பிறகு செய்யக்கூடிய அனைத்து இறுதி சடங்குகளும் நிஜமானது போலவே காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் பொதுவாகவே இது போன்ற காட்சிகளில் நடித்து முடித்த உடனே சில பரிகாரங்களை செய்வார்கள். அந்த வகையில் தற்போது நடிகை ஷீலா அவர்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் சேர்ந்து பரிகாரம் செய்து உள்ளார்கள்.

மேலும், நடிகை ஷீலாவுக்கு பூசணிக்காயாலும், எலுமிச்சை பழத்தினாலும், தேங்காய், கற்பூரம் கொழுத்தி திருஷ்டி சுற்றி முடித்த பிறகு தான் ஷீலாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம். அது மட்டுமின்றி நீண்ட தூரத்திற்கு நடிகை ஷீலாவை படையில் எடுத்துச் செல்லக் கூடாது என்பதனால் அவருக்கு பதிலாக டூப் போட்டு ஒரு பொம்மையை வைத்து எடுத்த தகவல் அனைவரும் அறிந்ததே. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் செய்த இந்த செயலைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement