பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இனி இவர் தான் முல்லையா ? ஏற்பார்களா ரசிகர்கள் ?

0
8126
kumaran
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-
Mullai

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.

இதையும் பாருங்க : Vip 2 படத்தில் கஜோலின் குமாஸ்தாவாக நடித்துள்ள சோம் சேகர் – அதுவும் இத்தனை காட்சியில் வந்திருக்காரே.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முல்லை மரணம் தற்கொலையா? கொலையா ? என்று பல சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பின்னர் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று காவல் துறையினர் அறிவித்து இருந்தனர். இப்படி ஒரு சித்ரா இறந்துவிட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவர் நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து உள்ளது.

saranya

இப்படி ஒரு நிலையில் சித்ராவிற்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடிக்க இப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது உறுதியான தகவலா என்பது தெரியவில்லை. நடிகை சரண்யா ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர் சித்ராவிற்கு நல்ல தோழியாகவும் இருந்தவர் இறுதியாக சித்ரா இவருடன் தான் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement