மூர்த்தி முதல் முல்லை வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
332
pandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
pandian

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடித்து வருகிறார்.

Pandian Stores Serial Wiki, Episodes, Cast & Crew | Vijay TV - News Bugz

தற்பொழுது இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் வெளியாகியுள்ளது. இதை பற்றி முன்னரே பேட்டி ஒன்றில் பங்கேற்ற குமரனிடம் அவர் வாங்கும் சம்பளம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த குமரன் தனுக்கு ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறியுள்ளார். இந்த சீரியல் இப்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்தநிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் சுஜிதா ஸ்டாலின் உட்பட முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவலை தற்போது காண்போம் சீரியலில் நடித்துவரும் சுஜாதாவிற்கு -ரூ. 17,000, மேலும், நடிகர் ஸ்டாலின் ரூ. 12,000 வாங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.

Team Pandian Stores celebrates Dhanalakshmi's baby shower; the actors share  their excitement - Times of India

மேலும், இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமாவுக்கு- ரூ. 8,000மும்,  அவருடைய கணவர் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட்  – ரூ. 10,000மும் வழங்கப்படுகிறது. மேலும், கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனுக்கும் – ரூ. 10,000மும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாவிற்கு – ரூ. 10,000மும் வழங்கப்படுகிறது.மேலும் கடைசி தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணனுக்கும்- ரூ. 6,000 வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisement