அட்லீயின் ஹெட்டர்ஸ் குறித்து அட்லீ ஸ்டைலில் பதில் அளித்த பிரியா – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
858
priyaatlee

சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார். அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியாக பிகில் படம் வரை அட்லீ இயக்கும் படங்களின் காட்சிகள் காபி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது. ஆனாலும், 7 ராகம் தான் 7 ஸ்வரம் தான் அதனால் எந்த படம் எடுத்தாலும் அது ஒரு படத்தோட காபி மாதிரி தான் இருக்கும் தான் எடுக்கும் படங்கள் தன்னுடைய சொந்த கதை தான் என்று தத்துவம் பேசுவார் அட்லீ.

இதையும் பாருங்க : ரோஜா சீரியல் காயத்ரிக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காரா – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

- Advertisement -

அதே போல அட்லீ இயக்கிய பல படங்களில் வரும் காட்சிகள் கூட பல படங்களில் இருந்து சுடப்பட்டது தான் இதனாலேயே இவருக்கு ரசிகர்களை விட ஹேட்டர்ஸ்கள் தான் அதிகம். இப்படி ஒரு நிலையில் தனது கணவருக்கு இருக்கும் ஹேட்டர்ஸ் பற்றி பதில் கூறியுள்ளார் அட்லீயின் மனைவி பிரியா. கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்த பிரியா நான் மகான் அல்ல, சிங்கம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அட்லீயை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் பிரியா. அப்போது ரசிகர் ஒருவர், “அட்லி வெறுப்பாளர்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? என்று கேள்விகேட்டிருந்தார் . இதற்கு பதில் அளித்த பிரியா, எங்கள் மீது இன்னும் அதிக அன்பு கொண்டுள்ள அவர்களுக்கு நன்றி… அன்பை பரப்புவோம் என அட்லீ ஸ்டைலில் பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement