தனது கன்னத்தை கிள்ளி கொஞ்சியாக வருங்கால கணவர் – சித்ரா பதிவிட்ட கியூட் புகைப்படம்.

0
32259
chitra

தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இந்த தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான் இதில் முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.

நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

- Advertisement -

தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை (ஆகஸ்ட் 24) சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. சித்ரா திருமணம் செய்து கொள்ளும் நபரின் பெயர் ஹேமந்த் ரவி.

View this post on Instagram

Finally ?❤️?got engaged ?❤️?

A post shared by Chithu Vj (@chithuvj) on

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சித்ரா தனது வருங்கால கணவர் குறித்து பேசியிருக்கிறார் அதில் ரொம்ப நாளாகவே பார்த்தவர்கள் அனைவரும் என்னிடம் கேட்டிருந்த கேள்விக்கு ஒரு வழியாக இப்போதுதான் விடை கிடைத்திருக்கிறது. வாழ்க்கையின் முக்கியமான தருணம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் முதன் முறையாக தனது நிச்சயதார்த்த பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement