‘ஆண்பாவம்’ வெற்றி விழாவில் பாண்டியராஜன் செய்த செயல், நெகிழ்ந்து போன துணை நடிகர்கள்

0
317
- Advertisement -

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாண்டியராஜன். இவரை ‘புதுமைக் கலை மன்னன்’ என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். சினிமாவிற்கு தோற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர். பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருட்டு முளியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக்கென நடக்கும் நடைதான்.

-விளம்பரம்-

இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் தான், துணை இயக்குனராக பணி புரிந்தார். பின் தனது 23 வயதிலேயே சினிமாவுலகில் இயக்குனராக பிரபலமடைந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், நடிகர் பாண்டியராஜன் ‘கன்னி ராசி’ என்ற படம் மூலம் தான் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து இவர் 10 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பிறர் கலைஞர்களையும் சினிமாவில் வளர்த்து இருக்கிறார்.

- Advertisement -

பாண்டியராஜன் குறித்து:

இதுபோல் இவர் தமிழ் சினிமாவில் படித்த சாதனைகள் ஏராளம். நடுவில் பாண்டியராஜன் அவர்கள் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது இவர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘PT சார்’ படத்திலும் பாண்டியராஜன் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் குறித்த ஒரு செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

வெற்றி விழா:

அதாவது பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால், அந்தப் படத்தின் வெற்றி விழாக்களில் சம்பந்தப்பட்ட முன்னணி நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம் ஆனால் தற்போது நடைமுறை மாறிவிட்டது. படத்தின் ஹீரோ, இசையமைப்பாளர்களுக்கு கார் வாங்கி தருவது, தங்கச் சங்கிலி பரிசளிப்பது என ட்ரெண்டிங் மாறிவிட்டது. ஆனால், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே பட வெற்றி விழா என்றால் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

ஆண் பாவம் படம்:

அப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஆண் பாவம்’ படத்தின் வெற்றி விழாவில் பாண்டியராஜன் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘ஆண் பாவம்’ படத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. காட்சிக்கு காட்சி காமெடியில் கலக்கி இருப்பார் பாண்டியராஜன். இந்தப் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹீட் அடித்தது. குறிப்பாக ஆண்களின் காதல் தோல்வி பாடலையே ‘காதல் கசக்குதய்யா’ என கலகலப்பான பாடலாக மாற்றி ட்ரெண்டிங் ஆக்கியவர் பாண்டிராஜன். இந்தப் பாடல் ரசிகர்களிடம் அமோக வெற்றி பெற்றது.

பாண்டியராஜன் செய்த செயல்:

1985 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் பாண்டியராஜன் அனைவருக்கும் ஷீல்ட் வழங்கி கௌரவித்திருக்கிறார். காதல் கசக்குதய்யா பாடலில் குரூப் டான்ஸர்களாக ஆடிய அனைவருக்கும் ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியே அழைத்து அவர்களுக்கும் ஷீல்டு வழங்கி கௌரவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் இது போன்று வெற்றி விழாக்களில் குரூப் டான்ஸர்களை யாரும் இப்படி கௌரவித்தது கிடையாது. அப்போது தங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து மேடை ஏற்றிய இயக்குனர் பாண்டியராஜனை நடன குழுவினர் நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள்.

Advertisement