கல்யாண பெண்ணை கடத்த திட்டமிடும் ராஜியின் அண்ணா, பதற்றத்தில் பாண்டியன் குடும்பம்- விறுவிறுப்பான திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
298
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பாண்டியன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக திருமணம் நடந்து விடுகிறது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். அதோடு மூத்த மகன் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை என்று வீட்டில் எல்லோருமே அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக சரவணனுக்கு சம்மந்தம் பேசி முடிக்கப்படுகிறது. தங்க மயிலை தான் சரவணன் திருமணம் செய்ய இருக்கிறார். தாங்கள் வசதியான குடும்பம் என்று பொய் சொல்லி தங்கமயில் வீட்டில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் . திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் எபிசோட்டில் திருமணத்திற்கான துணிகளை எடுக்க பாண்டியன் குடும்பம் கடைக்கு சென்று இருக்கிறார்கள்.

தங்கமயில்-சரவணன் திருமணம்:

அப்போது எதிர்பாராத விதமாக கல்யாண துணிக்கு மட்டும் மூன்று லட்சத்திற்கு மேல் தாண்டி விடுகிறது.
இதை பார்த்து பாண்டியன் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பின் மொத்த கல்யாண செலவையும் நினைத்து பாண்டியன் பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் கல்யாணத்தை நடத்த விடமாட்டோம் என்று கடன்காரர்கள் தங்கமயிலின் அம்மா, அப்பாவிடம் சண்டை போடுகிறார்கள். அவர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் கடன் கொடுத்தவர்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பாண்டியன் வீட்டில் இருந்து எல்லோரும் இறங்குகிறார்கள். இதை பார்த்து தங்கமயில் கல்யாணம் நிற்க போகிறது என்று உள்ளே அழுது கொண்டு புலம்புகிறார். ஒரு வழியாக அந்த பிரச்சனை தீர்ந்தது. திருமணத்திற்கான நிகழ்வு சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அப்போது மணப்பெண்ணின் நகைகளை எடை போட்டு பார்க்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டு சொந்த பந்தங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு தங்கமயில் மயக்கம் போட்டு விடுகிறார். பின் பாண்டியன் நகை எல்லாம் எடை போட வேண்டாம். இது மரியாதையாக இருக்காது என்று சொல்லிவிடுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

அதற்கு பின் ஜோடியாக நின்று எல்லோருமே சந்தோஷமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராஜியின் அண்ணன் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று மணப்பெண்ணை கடத்த சொல்கிறார். ஆனால், அந்த கும்பல் மாற்றி மீனா, ராஜிவை கடத்தி விடுகிறார்கள். எல்லோருமே மண்டபத்தில் மீனா, ராஜி காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில் சரவணன்- தங்கமயில் திருமணம் நடக்குமா? மீனா, ராஜிவை கண்டுபிடிப்பார்களா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement