முகப்பருவால் பறிபோன சீரியல் வாய்ப்பு, கடன் பிரச்சனை – பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா ?

0
284
deepika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபிகா. இவர் தொகுப்பாளினியாக தன் கேரியரை தொடங்கினார். பின் சந்திரகுமாரி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடர்களில் நடித்து உள்ளார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்து என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். பின் தீபிகா சீரியலில் இருந்து விலகினார். தற்போது இந்த சீரியலில் ஐசு கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருகிறார். தீபிகா சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது குறித்து தீபிகாவும் விளக்கம் கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-
Deepika

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை தீபிகாவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் கூறி இருப்பது, என் அம்மாவும் அப்பாவும் தான் என்னுடைய பலமே. இதுவரைக்கும் அவர்களுடைய கஷ்டத்தை என்னிடம் சொல்லியதே கிடையாது. நானும் அவர்களிடம் என் கஷ்டத்தை சொல்லியது கிடையாது. இரண்டு பேருமே தூரமாக இருப்பதால் முடிந்த அளவுக்கு சோகத்தை வெளிக்காட்டாமல் சந்தோஷத்தை பரிமாறிக் கொள்கிறோம். இப்பவும் நான் என்னுடைய யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியாவில் கவனம் செலுத்திக் கொண்டு தான் இருக்கிறேன். இரண்டு சேனல்களில் இருந்து வாய்ப்பு வந்தது.

- Advertisement -

யூடியூப் சேனல் பற்றி தீபிகா சொன்னது:

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஓகே தான் இருந்தாலும் அந்த கதைக்களம் எனக்கு செட் ஆகும்னு தோணவில்லை. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனக்கு பெரிய அளவில் கான்டக்ட் இல்லாததால் கதாநாயகிக்கான தேர்வு நடக்கிறது தெரிவது இல்லை. அப்படி தெரியும் நேரத்தில் நான் போகவும் தயாராகத்தான் இருக்கிறேன். சமீபத்தில் எங்க ஊருக்கு போய் போயிருந்தேன் சும்மா அதை vlog மாதிரி எடுத்து போட்டு இருந்தேன். அந்த கிராமத்து கலாச்சாரம் பலருக்கும் பிடித்திருந்ததால் தொடர்ந்து அப்படியான வீடியோக்களில் கவனம் செலுத்தி செலவிட்டு இருக்கிறேன். இது தவிர எனக்கு டிராவல் பண்ணுவது ரொம்ப பிடிக்கும். அது சார்ந்தும் வீடியோ எடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

கண்ணன்- தீபிகா நட்பு:

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான் கிட்டத்தட்ட 6 மாதம் வேலை பார்த்திருக்கிறேன். முதல் மூன்று மாதங்கள் கண்ணனிடம் நான் அதிகமாக பேசினதே கிடையாது. ஆரம்பத்தில் பேசும்போது வாங்கப் போங்க என்று மரியாதையோடு தான் பேசுவேன். நாங்க ரெண்டு பேரும் ஜோடியாக சீரியலில் நடிக்க ஆரம்பித்ததும் எங்களுடைய கதாபாத்திரம் கண்ணன்- ஐசு என்ற பெயரிலேயே சும்மா ரில்ஸ் போட்டுட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தோம். அடுத்த மூன்று மாதத்தில் தான் நாங்க பிரண்ட்லியா பேச ஆரம்பித்தோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து யூடியூப் சேனல் எல்லாம் ஆரம்பித்தோம். பின் கண்ணனுக்கு எங்க வீட்டை அறிமுகப்படுத்தினேன். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன், என்னுடைய ஃபேமிலி பற்றி அவனுக்கு தெரிய ஆரம்பித்தது.

-விளம்பரம்-

சீரியல் குறித்து தீபிகா சொன்னது:

பின் சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று தெரிந்ததுமே நான் ரொம்ப உடைந்து விட்டேன். எனக்கென்று சில பொறுப்புகள் இருக்கு. என்னுடைய அப்பா அம்மாவை கவனிக்கணும் கடன் பிரச்சனைகளை தீர்க்கவும் எனக்கு வேலை ரொம்பவே முக்கியம். அது இல்லை என்ற போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால், அந்த சமயத்திலும் கண்ணன் என் கூட இருந்து இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று எனக்கு சப்போர்ட் பண்னான். இப்ப சோசியல் மீடியாவில் இருந்து வர பணத்தை வைத்து ஏதோ சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். கண்ணன் மூலமாகத்தான் ஐஸ்வர்யா என்கிற ரோலில் நடிப்பது வெளியே தெரிந்தது. இப்ப வரைக்கும் கண்ணனுடைய ரசிகர்கள் அவனை வைத்து தான் என்னையும் கொண்டாடுகிறார்கள்.

கண்ணன் பற்றி தீபிகா சொன்னது:

அந்தவகையில் கண்ணன் என்னை என்னைக்குமே விட்டுக்கொடுக்கவில்லை. இப்ப வரைக்கும் எனக்கு நல்ல நண்பனாக இருக்கிறான். அவனை மாதிரி ஒரு பிரிண்ட் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். போன வருடம் விஜய் அவார்ட்ஸ் நடந்தபோது தான் என்னுடைய ட்ராக் ஆரம்பித்து இருந்தது. இந்த வருஷம் கண்டிப்பாக நல்ல நடித்து மேடையில் நின்று பேசி அவர்களைப் பெருமைப்படுத்தனும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது முடியாமல் போனது. இப்ப நடக்கப்போகிற விஜய் அவார்ட்ஸில் கண்ணன் விருது வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோல் என்னுடைய முகப்பரு பிரச்சினை முடிந்தது. தற்போது முகப்பரு ட்ரீட்மென்ட் முடிந்து சரியாகிவிட்டது. இன்னும் நல்ல ஒரு ப்ராஜெக்டில் நிச்சயம் எல்லோரையும் மீண்டும் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement