பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தங்கமயிலுக்கு நிஜத்திலும் திருமணம் ஆகிவிட்டதா ? அவரே சொன்ன தகவல்

0
576
- Advertisement -

நடிகை சரண்யா துராடி திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா துராடி திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா அவர்கள் செய்திவாசிப்பாளராக மீடியாவில் நுழைந்தார். அதன் பின்னர் இவர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக சரண்யா பணியாற்றினார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் சில படங்களில் நடித்தார். இருந்தும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில் சீரியலில் நடித்து இருந்தார்.

- Advertisement -

சரண்யா குறித்த தகவல்:

பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் என்ற தொடரில் நடித்து இருந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியலில் கமிட் ஆகி இருந்தார். இவருக்கு முன்பாக அந்த தொடரில் ஸ்ரீத்து கிருஷ்ணன் தான் நடித்து வந்தார். அவர் விலகிய பின் தான் சரண்யா இந்த தொடரில் கமிட் ஆனார். ஆனால், இந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின்னர் கிட்டத்தட்ட இவர் ஓராண்டுகள் எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதன் பின் இவர் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற தொடரில் நடித்தார். 50 எபிசோடுகளை கடந்த பின் இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது. மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் அப்பா- மகன்களுக்கு இடையேயான பாச கதையை மையமாகக் கொண்டது. இது ஒரு பக்கம் இருக்க, சரண்யா, சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தன்னுடைய சொந்த வீடு கட்டியது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றும் போட்டிருந்தார்.

-விளம்பரம்-

சரண்யா காதலர்:

இதற்கிடையே இவர் ராகுல் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் புகைப்படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதுமட்டுமில்லாமல் இவர்களின் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடந்திருந்தது. ஆனால், ராகுலுக்கும் தனக்கும் திருமணம் ஆனது குறித்து வெளிப்படையாக சரண்யா அறிவிக்கவில்லை. இதை அடுத்து கடந்த மாதம் ராகுலின் பிறந்தநாளுக்கு சரண்யா, ஹாப்பி பர்த்டே ஹஸ்பண்ட் என்ற கேப்ஷன் பதிவிட்டு இருந்தார்.

சரண்யா திருமணம் :

இதன் மூலம் ரசிகர்கள், உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் நேற்று வரலட்சுமி பூஜை நடைபெற்றிருக்கிறது. சரண்யாவும் வரலட்சுமி பூஜையை கொண்டாடி இருந்தார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லைஃபில் முதல் வரலட்சுமி பூஜை அவருடன் என்று சரண்யா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். மேலும் சரண்யாவின் தாலிக்கு ராகுல் குங்குமம் வைக்கும் வீடியோவும் பகிர்ந்து இருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Advertisement