தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமாக இருந்த நடிகர் நடிகைகள் சிலர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூட தெரியாமால் போய்விடுகிறது.90 களில் பிறந்தவர்களுக்கு தெரியும் அவர்கள் கண்ட சினிமாவாயும் அதில் நடித்த நட்சத்திரங்களையும் அவர்கள் இன்றளவும் மறக்க மாட்டார்கள் என்று.

அப்படி 80 முதல் 90 வரை வந்த சில தரமான படங்களில் நடித்தவர் தான் நடிகை சாந்தி கிருஷ்ணா.1964 ளில் மும்பையில் பிறந்த இவர் கேரள படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் 1981 இல் தமிழில் வெளியான சிவப்பு மல்லி என்ற தமிழ் படத்தில்
அறிமுகமானார்.

Advertisement

ஸ்ரீதேவி, ரோஜா, குஷ்பு போன்ற நடிகைகள் இருந்த காலத்திலேயே இவர் தனக்கென்று ஒரு பாதையை வகுத்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்தார்.இவரது நடிப்பில் வியந்த இயக்குனர் விசு மணல் கயிறு என்ற படத்தில் நடிக்க வாய்ப்பாளித்தார்.இவர் கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் படத்தில் எஸ். வி. சேகருக்கு ஜோடியாகவும் நடித்தார்.

Advertisement

இவர் நடித்த பண்ணீர் புஷ்பங்கள் படத்தில் வரும் ஆனந்த ராகம் என்ற பாடல் இன்றும் எவர் கிறீன் ஹிட் தான்.1984 ல் மலையாள நடிகர் ஸ்ரீநாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சாந்தி பின்னர் 1995 இல் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிடடது.

Advertisement

அதன் பின்னர் சதாசிவம் என்பவரை 1998 இல் திருமணம் செய்துகொண்டு அவரையும் 2016 இல் விவாகரத்து செய்துவிட்டார்.இன்றும் மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.தற்போது மீதுள் மற்றும் மிதாலி என்ற தனது 2 பிள்ளைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார் சாந்தி கிருஷ்ணா.

Advertisement