தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
இந்த படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்லவிமர்சனத்தை கொடுத்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல பேருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வைஸ் கேப்டன் சச்சின் சிவாவிற்கு உதவி செய்து வருகிறார்.
சச்சின் சிவா:
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட்டின் வைஸ் கேப்டன் தான் சச்சின் சிவா. இவர் மதுரையில் உள்ள தெப்பக்குளத்தை சேர்ந்தவர். இவர் பிறந்த ஆறு மாதத்தில் போலியோ அட்டாக் ஆனார். பின் இவர் பள்ளிக் காலங்களில் தன்னுடைய அடையாளமாக விளையாட்டு தான் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தார். மேலும், மாற்றுத்திறனாளி என்ற ஒரே காரணத்தினால் இவர் யாரையும் சேர்த்துக்கொள்ளவில்லை. இவர் கிரிக்கெட் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக டிவியில் சச்சின் விளையாடிய விளையாட்டை பார்த்து பார்த்து தான் தனக்குள்ளே கிரிக்கெட்டை உருவாக்கினார்.
சச்சின் சிவா அளித்த பேட்டி:
பின் தன்னை தானே மெருகேற்றி இவர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். அதற்கு பின்பு இவர் மாவட்டம், மாநிலம் என்ற அளவில் போட்டிகளில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட்டின் வைஸ் கேப்டன் ஆனார் சச்சின் சிவா. இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் 6 மாத குழந்தையாக இருந்த போதே போலியோ நோய் ஏற்பட்டது. மற்றவர்களின் பார்வையில் நான் பலவீனமாக தெரியும் போது கஷ்டமாக இருக்கும்.
சச்சின் சிவா பெயர் வந்த காரணம்:
தற்போது நான் இந்தியாவுக்காக விளையாடி சாதித்தாலும் ஆரம்பத்தில் எனக்கென்று தனியாக பயிற்ச்சியாளர் கிடையாது. இந்தியா டீமில் செலக்ட் ஆகும் வரைக்கும் நான் முழுக்க முழுக்க சச்சின் உடைய வீடியோக்களை பார்த்து தான் கிரிக்கெட் கற்றுக்கொண்டேன். அதிலிருந்து தான் எனக்கு சச்சின் சிவா என்று பெயர் வந்தது. ஆனால், நான் இதுவரை சச்சினை சந்தித்ததில்லை. மேலும், சாதாரண கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கு கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எனக்கு சிவகார்த்திகேயன் உடைய அறிமுகம் கிடைத்தது.
சிவகார்த்திகேயன் செய்த உதவி:
அவர்தான் எனக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கிரிக்கெட் பேட்டை வாங்கித்தந்தார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய நிலைமையைத் தெரிந்துகொண்டு அவர் மாதம் மாதம் எனக்கு சம்பளம் கொடுக்கிறார். இன்று வரையும் நான் அந்த பேட்டில் தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஸ்பான்சர், சிவகார்த்திகேயன் கொடுக்கும் சம்பளத்தை விளையாட்டிற்கு பயன்படுத்துகிறேன். தற்போது நான் ஒரு கடை ஆரம்பித்து சம்பாதித்து வருகிறேன். அதில் வீட்டு செலவுக்கு தேவையான அளவிற்கு வருமானம் வருகிறது என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.