நான் இருந்தால் என் கடைசி மகனுக்கு மட்டும் இந்த உதவியை செஞ்சுடுங்க.!

0
1236
Paravi-Muniyamma
- Advertisement -

பறவை முனியம்மா என்ற பழம்பெரும்  நடிகையை நம்மில் பலருக்கும் தெரியும். ‘தூள்’ படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக வந்து ‘மதுரை வீரார் தான்டி’ என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் நடிகையும் படகியுமான பறவை முனியம்மா பாட்டி.

-விளம்பரம்-

சினிமாவில் பாடி ஆடி நடிக்கவே, ஒரு நடிகையாக, நாயகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக கொண்டாடினார்கள். வறுமையில் வாடும் முனியம்மா தற்போது வாய்ப்பு குறைந்து வறுமை சூழ்ந்து, வயோதிகம் தந்த நோயோடு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இப்போது இருக்கிறார் முனியம்மா.

- Advertisement -

தமிழில் பல்வேறு படங்களில் நடித்த இவருக்கு தமிழக அரசு சமீபத்தில் கலைமாமணி விருதும் அறிவித்து. மேலும், கடந்த சில ஆண்டுகளாக வறுமையில் வாடி வந்த இவருக்கு, 6 பிள்ளைகள் உள்ளனர். இவரது நிலையை அறிந்து முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்த போது 6 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக வழங்கியதன் மூலம் 6000 ரூபாய் வரை மாத ஊதியமும் கிடைக்கிறது.

பறவை முனியம்மாவின் கணவன் இறந்து மூன்று ஆண்டுகளாக ஆகிவிட்ட நிலையில் தனது மாற்றுத்திறனாளிகனுடன் வசித்து வரும் நிலையில் தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், உடல்நலம் சரியில்லை என்றும் நமக்கு வழங்கி வரும் நிதி உதவியை தனது இறப்புக்குப் பிறகு தனது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசிய அவர், அம்மா அவர்களால் தமிழக அரசு மாதம் 6,000 எம்ஜிஆர் அறக்கட்டளையிலிருந்து எனக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனக்கு மூளை வளர்ச்சியில்லாத கடைசி பையன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு 36 வயதாகிறது எனவே, எனக்கு பின்னர் அந்த தொகையை என் மூளை வளர்ச்சியில்லாத மகனுக்கு வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், எனக்கு எந்த கலைமாமணி விருது வரவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு இருந்தேன் அது இப்போது நிறைவேறி இது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது

Advertisement