பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
2329
- Advertisement -

யூடியூபில் எப்போதும் ட்ரெண்டாக இருந்து இளம் ரசிகர்களை காரணத்தை சில சேனலகளில் மிக முக்கியமான இரண்டு சேனல் தான், ‘மெட்ராஸ் சென்ட்ரல் மற்றும் ‘எரும் சாணி’. இந்த இரண்டு குரூப் தான் சளிக்காமால் மக்களை என்டர்டெய்ன் செய்து கொண்டுவந்தது. இதில்’மெட்ராஸ் சென்ட்ரல்’ என்னும் யூடியூப் சேனல் தெரியாத ஒருவர் தற்போது இருக்க முடியாது. அந்த அளவிற்கு சமூக வலைதள வாசிகளை தங்கள் யூட்டிப் சேனல் மூலம் கண்ட்ரோல் செய்து வைத்திருந்தனர் ‘கோபி -சசுதாகர்’ இணை.

-விளம்பரம்-

கடந்த சில வருடமாக மெட்ராஸ் சென்ட்ரல் சேனாலுக்காக பல வீடியோக்களை உருவாக்கி பிரபலம் ஆகி வந்தனர் இருவரும். இவர்களது வீடியோக்கள் பெரும்பாலும் அரசியல் கேளிகள் கலந்ததாக இருக்கும். இதனால் பலமுறை இருவருக்கும் கொலை மிரட்டல் வந்ததுள்ளதாக ஏற்னவே கூறியுள்ளனர். இந்த மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் இருந்து வெளியேறி இருவரும் ‘Paridhabangal’ என்னும் இன்னொரு யூடியூப் சேனலை சொந்தமாக ஆரம்பித்தனர்.

- Advertisement -

மேலும், கோபி மற்றும் சுதாகர் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ரிஜெக்ட் செய்யப்பட்டார்கள் என்பது பலரும் அறிந்த விஷயம் தான். அதே போல இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் முதன் முறையாக வாங்கிய சம்பளம், 1000 ரூபாய் தானாம்.

மெட்ராஸ் சென்ட்ரல் நன்றாக போய் கொண்டு இருந்த நிலையில் பரிதாபங்கள் சேனலை ஆரம்பிக்க என்ன என்று பேட்டி ஒன்றில் சுதாகர் மற்றும் கோபி கூறியது, முந்தைய மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் சரியான சுதந்திரம் இல்லை எனவும் நினைத்ததை செய்ய முடியவில்லை எனவும் கூறியுள்ளனர். இதனால் தான் தனியாக ஒரு சேனல் ஆரம்பித்துள்ளோம் என கூறினர். மெட்ராஸ் சென்ட்ரல் போல இவர்களது பரிதாபங்கள் சேனலும் வேற லெவலில் ரீச் ஆகியுள்ளது

-விளம்பரம்-

Advertisement