இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தை பா ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றிருந்தது. அதோடு இந்த படம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பரியேறும் பெருமாள் படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து பல விருதுகளையும் வென்றது.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் பல்வேறு விதமாக விமர்சித்து வருகிறார்கள். பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் கரன் ஜோகர். இவர் காபி வித் கரன் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இவர் ஹிந்தியில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கி உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. மேலும், இவர் ஆங்கிலம், மராத்தி போன்ற பிற மொழி படங்களையும் இந்தியில் இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். அந்த வரிசையில் தற்போது இவர் தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த பரியேறும் பெருமாள் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். மேலும், ஹிந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்யும் உரிமையை இயக்குனர் கரண் ஜோகர் தற்போது வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீளம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இயக்குனர் கரண் ஜோகர் மற்ற மொழிகளிலிருந்து பல படங்களை இந்தியில் ரீமேக் செய்து இருந்தாலும் தமிழ் படத்தை ரீமேக் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையையே சமீப காலமாகவே தமிழ் மொழி படங்களை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். சிங்கம், அந்நியன், விக்ரம் வேதா போன்ற பல படங்களை இந்தியில் ரீமேக் செய்திருந்தார்கள். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும்வந்தது.
அந்த வகையில் தற்போது தமிழில் மிகப்பெரிய வெற்றி கொடுத்த பரியேறும் பெருமாள் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் கொந்தளித்து போய் சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களைப் போட்டு விமர்சித்து வருகிறார்கள். அதில் அவர்கள் கூறியது, பரியேறும் பெருமாள் படத்தில் கிளைமாக்ஸில் வரும் டீ குடிக்கும் காட்சி இப்படி தான் இருக்கும் என்று ஐஸ்கிரீம் படம் போட்டுள்ளார்கள். பின் ஆனந்தி கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை போட்டு இவர் தான் நடிப்பார் என்று கூறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பரியேறும் பெருமாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் சண்டை காட்சிக்கு பாலிவுட் நடிகரின் பழைய புகைப்படத்தை போட்டு இப்படித்தான் இருக்கும் என்று விமர்சித்து இருக்கிறார்கள். மேலும், தமிழ் சினிமா உலகில் பிரபலமான பரியேறும் பெருமாள் படத்தை இப்படி எல்லாம் ரீமேக் செய்வதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யக்கூடாது என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.