‘சண்டாள பாவி நடிக்க மாட்டேன்னு தானே சொன்னேன்’- கண்ணீர் மல்க பரியேறும் பெருமாள் நடிகர் அளித்த பேட்டி

0
362
- Advertisement -

சண்டாள பாவி நான் நடிக்க மாட்டேன்னு தானே சொன்னேன் என்று இயக்குனர் மாரி செல்வராஜை பரியேறும் பெருமாள் நடிகர் திட்டி பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தை பா ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றிருந்தது. அதோடு இந்த படம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பரியேறும் பெருமாள் படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து பல விருதுகளையும் வென்றது. அதேபோல இந்த படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த பல நடிகர்கள் இருக்கின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒருவர் தான் பரியனின் தந்தையாக நடித்த தங்கராஜ்.

- Advertisement -

பரியேறும் பெருமாள் நடிகர்:

இந்த படத்தில் கலைக் கூத்தாடியாக இவர் நடித்து இருந்தார். அதுவும் இவர் கூத்துக்களில் பெண் வேடம் போட்டு ஆடுவதால் நிஜத்திலும் பெண்னை போன்ற நயனத்தை பெற்று இருப்பார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவர் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தும் இருப்பார். இதனால் இந்த பட விழாவில் இவரது காலில் விழுந்து வணங்கி இருந்தார்கள் படக்குழு. நடிகர் தங்கராஜை இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு கிராமத்தில் இருந்து தான் அழைத்து வந்தார்.

திரைப்பட வாய்ப்பு :

இரவில் வெள்ளரிக்காய் தோட்டத்தில் காவலுக்காக படுத்துக் கொண்டு இருந்தவரை எழுப்பி ஒப்பாரி பாடலை பாட வைத்து பின்னர் இவரை இந்த படத்திற்காக தேர்வு செய்தார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்திற்கு பின்னர் நடிகர் தங்கராஜுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் தெருக்கூத்துகளில் வேடம் கட்டி ஆடுவதையும் இவர் நிறுத்தி விட்டாராம். மேலும், இரண்டு மகள்களையும் படிக்க வைத்த இவர் குடும்ப கஷ்டம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து எலுமிச்சை, பனங்கிழங்கு போன்றவற்றை தன்னுடைய கிராமத்தில் காய் கறி விற்று பிழைத்து வந்து உள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் தங்கராஜ் அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தங்கராஜ் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, படத்தில் ஒரு காட்சி எடுக்கும் போது பளார் என்று மாரி செல்வராஜ் என்னை அடித்துவிட்டார். சண்டாள பாவி நான் நடிக்க வரமாட்டேன்னு தானே சொன்னேன். என்னை வலுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்து இப்படி அடித்து கொல்றீங்களே! என்று புலம்பிட்டு இனி நடிக்க முடியாது கிளம்பிடலாம் என்று நினைத்தேன். அதற்கு பிறகு மாரி செல்வராஜ் பொறுமையாக வந்து மன்னித்து விடுங்கள்.

மாரி செல்வராஜ் குறித்து சொன்னது:

நான் சொல்லுவதை அப்படியே செய்தால் மட்டும் போதும். நீங்கள் நாடகத்தில் நடிப்பதை விட ஒரு படத்தில் நடித்தால் போதும் உலகம் முழுவதும் உங்களுடைய பெயர், புகழ் தெரியும் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே என்னை ஆளாக்கிவிட்டார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படம் மூலம் நான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதை நினைத்து சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது என்று பல விஷயங்களை கூறி இருந்தார்.

Advertisement