ஒண்ட வீடு கூட இல்லாமல் தவித்த தங்கராசு – பணமும் கொடுத்து மகளுக்கு வேலையையும் கொடுத்த கர்ணன்.

0
844
- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் கூத்து கலைஞராகவும், கதாநாயகனின் அப்பாவாகவும் நடித்திருந்தவர் தங்கராசு. இவரை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும், முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இருந்தாலும் வறுமை இவரை விட்டு நீங்கவில்லை. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ள இளங்கோ நகர் பகுதியில் தங்கராசு வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் மார்க்கெட்டில் வெள்ளரி வியாபாரம் பார்த்து தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்தார். பின் கொரோனா பாதிப்பால் இவருடைய வியாபாரம் முடங்கிப் போனது. இவர் ரேஷன் அரிசியை வைத்து தான் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பிறகு சமீபத்தில் பெய்த கன மழையால் அவருடைய வீடும் இடிந்து விழுந்தது. என்ன செய்வது என்று புரியாமல்? தங்கராசு குடும்பம் நிலைகுலைந்து இருந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தங்கராசுக்கு வீடு கட்டித் தருவதாக சொல்லிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இதுகுறித்து தங்கராசு குடும்பத்திடம் விசாரித்தபோது அவர்கள் கூறியது, எங்களுடைய நிலைமையை பார்த்தீர்களா? என்னுடைய மாமனார் மிலிட்டரியில் பணிபுரிந்தவர். என் கணவர் பகலில் வயல் வேலைக்கு செல்வார். இரவில் வேஷம் கட்டி கோயிலில் ஆட்டம் போடுவார். அப்படி கோவிலில் ஆடுவதை பார்த்து தான் மாரிசெல்வராஜ் தம்பி அவரை படத்தில் நடிக்க அழைத்து சென்றார். ஆரம்பத்தில் என் கணவர் தயங்கினார். பின் நீங்கள் தான் நடிக்கணும் என்று கட்டாயப்படுத்தி அவரை நடிக்க வைத்தார்கள். படம் வெளிவந்த பிறகு பலரும் அவரை பாராட்டினார்கள்.

ஆனால், நாங்கள் யாருமே பரியேறும் பெருமாள் படத்தை பார்க்கவே இல்லை. பின் இவரை தொடர்ந்து தங்கராசு பேச ஆரம்பித்தார். நான் என்னுடைய 17 வயதில் இருந்து வேஷம் கட்டி ஆட தொடங்கினேன். இந்த தொழிலை எனக்கு யாரும் சொல்லித் தரவில்லை. நானே கற்றுக்கொண்டு ஆடினேன். ஆரம்பத்தில் இந்த தொழிலுக்கு போகும் போது என்னை பலரும் பலவிதமாக கிண்டல் கேலி செய்திருக்கிறார்கள். நான் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் குடும்ப சூழலுக்காக ஆடினேன். பின் போகப் போக என்னுடைய நடனத்தை பார்த்து பலரும் பாராட்டினார்கள். பகல் முழுக்க வயல்வெளி, வெள்ளரி வியாபாரம் பார்ப்பேன். இரவில் கூத்தாடுவேன்.

-விளம்பரம்-

இப்போ ஆட்டத்தை நிறுத்தி 12 வருடம் ஆகிறது. வெள்ளரி வியாபாரம் மட்டும் பார்த்துக் கொண்டு வருகிறேன். பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு நான் போற இடத்தில் எனக்கு நல்ல மரியாதை கிடைத்தது. இருந்தாலும் என்னுடைய வறுமை என்னை துரத்துகிறது. எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு. நாங்க ரெண்டு பேரும் தான் படிக்கல என்று எங்களுடைய பெண்ணை டீச்சருக்கு படிக்க வைத்து இருக்கிறோம். மேலும், கொரோனாவால் என்னுடைய வெள்ளரி வியாபாரம் முடங்கி போனது. பின் எப்படியோ போராடி வாழ்க்கை நடத்தி வந்தேன் மேலும், மூன்று மாதங்களுக்கு முன்பு நெல்லையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி எங்களுடைய வீடு இடிந்து விழுந்தது. நல்ல வேளை அந்த நேரத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

நாங்களும் எவ்வளவோ அதிகாரிகளை பார்த்து உதவி செய்ய கேட்டோம். ஆனால், யாரும் எங்களுக்கு உதவி பண்ணிவில்லை. அதற்குப்பிறகுதான் கலெக்டர் ஐயாவுக்கு மனு எழுதிக் கொடுத்தோம். அவர் எங்களுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு ஆபீசுக்கு வர சொல்லி இருந்தார். பின் என் பொண்ணுக்கு மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில் டைப்பிங் வேலை போட்டுக் கொடுத்தார். வீட்டுக்கும் ஏற்பாடு பண்ணி தரேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் கலெக்டர் ஐயா எங்களுக்கு செய்த உதவியை நாங்கள் என்றென்றும் மறக்க மாட்டோம். வெளியே தெரியாமல் கஷ்டப்பட்டு இருக்கிற நாட்டுப்புற கலைஞர்கள் உடைய வாழ்க்கையை அரசு நல்லபடியா அமைத்து கொடுக்கணும் என்று இந்த தருணத்தில் நான் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

பரியேறும் பெருமாள் தங்கராசு

இவரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியது, நான் ஆட்சியராக என்ன செய்ய வேண்டுமோ? அதைத்தான் செய்து இருக்கிறேன். அவர்கள் பொண்ணு நல்லா படித்திருக்கிறார்கள். இவ்வளவு வறுமையிலும் அவர் படிக்க வைத்திருப்பது பெரிய விஷயம். அதனால் கான்ட்ராக்ட் அடிப்படையில் அவர்களுக்கு வேலை போட்டுக் கொடுத்து இருக்கிறேன். வீடு கட்ட முதற்கட்ட நிவாரணமாக 70,000 நிதியை உடனடியாக வழங்க இருக்கிறோம். தொடர்ந்து அவரது வீடு கட்டித்தருவற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரமாகவே அவர்களுக்கு முழு உதவியும் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement