லட்ச கணக்குல செலவு செஞ்சு படிக்க வச்சி டாக்டர் ஆகணும்னு உங்க பெத்தவங்க கனவு காண்றங்க, ஆனா நீ என்னடானா – கடுப்பான நடிகை.

0
1927
Anaika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் ‘ஏ1’. சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜானசன் கே இயக்கத்தில் சந்தானம் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் இணைந்தனர். இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்தனர்.

-விளம்பரம்-

முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன்நடித்து இருந்தார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன், எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துனர். இந்த படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்த அனைகா சோடி ஏற்கனவே சித்தார்த் நடிப்பில் வெளியான ‘காவியத் தலைவன்’ படத்தில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : கொரோனாவால் இறந்த தனது மனைவி குறித்து முதன் முறையாக அருண் ராஜா பதிவிட்ட நீண்ட உருக்கமான பதிவு.

- Advertisement -

காவியத்தலைவன் படத்திற்காக இவருக்கு சிறந்த துணை நடிகையாக விருதும் கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அதர்வா முரளி நடித்த செம போதை ஆகுதே, ஜீவா நடித்த ‘கீ’ போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தெலுகு படங்களிலும் நடித்து உள்ளார். பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேளிவிகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘சேர்’ புகைப்படத்தை அனுப்பி, நான் உங்களை போன்று அழகு பெண்களுக்கு உட்கார சேராக இருக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.இதனை பார்த்து கடுப்பான நடிகை உங்களது பெற்றோர் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைத்து பிள்ளைகளை டாக்டராக்க வேண்டும், இன்ஜினியராக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.நீங்கள் எனக்கு இருநூறு ரூபாய் சேராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement