கோலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் பார்த்திபன் உருவாக்க இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் நடிகர் எம்கே தியாகராஜ பாகவதர். இவர் 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
அதோடு சுமார் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 1944 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் சென்னை பிராட்வே என்ற ஒரே திரையரங்கில் ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தது. அன்றய சென்னையான ‘மதராஸ்’ கால கட்டத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார்.
எம்கே தியாகராஜ பாகவதர் மரணம்:
தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்தார். பின் இறுதி காலகட்டத்தில் வறுமையின் பிடியில் பல கொடுமைகளை அனுபவதித்து நவம்பர் 1, 1959ல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்.
பார்த்திபன் டீவ்ட்:
சமீபத்தில் தியாகராஜ பாகவதரின் 114வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக பார்த்திபன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், First super star of tamilnadu! புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். Last reel மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன் என்று கூறி இருக்கிறார்.
First super star of tamilnadu!!!!!!!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 1, 2023
புகழின் உச்சம் கண்டவர்.மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர்.பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர்.Last reel மிக மோசமான சோகம்!பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன். pic.twitter.com/2pfve2mqYM
பார்த்திபன் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பார்த்திபன். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன் பின் தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
பார்த்திபன் நடித்த படங்கள்:
அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக பலரின் கவனத்தை ஈர்த்தது. இதனை அடுத்து பார்த்திபன் அவர்கள் படம் இயக்குவதிலும், நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பார்த்திபனின் இந்த ட்வ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் எம்கே தியாகராஜ பாகவதர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.