நானே வருவேனை நான் காலாய்த்தேனா – சர்ச்சை வீடியோவிற்கு பார்த்திபன் கொடுத்த விளக்கம்.

0
330
- Advertisement -

பொன்னியின் செல்வன் பிரெஸ் மீட்டில் தனுஷின் நானே வருவேன் படத்தை கேலி செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு பார்த்திபன் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தனுஷ். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நானே வருவேன். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் தனுஷ் அவர்கள் ஒட்டி பிறந்த பிரபு, கதிர் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கதிர் வழக்கமான பிள்ளைகளைப் போல சிறு வயதில் இருந்து வித்தியாசமாக இருக்கிறார். இதன் காரணமாகவே அவருடைய பெற்றோர்கள் கதிரை ஒரு கோயிலில் விட்டு விடுகிறார்கள். பிரபுவை மட்டுமே அவர்களுடன் வைத்து வளர்க்கிறார்கள். பல வருடங்கள் கழித்து பிரபுவுக்கு அழகான மனைவி, அன்பான மகள் என்று சந்தோஷமாக வாழ்கிறார்.

- Advertisement -

நானே வருவேன் படம்:

அப்போது தன் மகள் மீது ஒரு ஆவி இருப்பதை தனுஷ் கண்டுபிடிக்கிறார். அந்த ஆவியிடம் தனுஷ் பேச முயற்சிக்கிறார். ஆனால், அந்த ஆவி தனுஷ் இடம் ஒரு கோரிக்கை வைக்கிறது. தனுஷும் அதை செய்ய துணிகிறார். அந்த ஆவி அப்படி என்ன செய்ய சொன்னது? தனுஷ் ஆவி சொன்னதை செய்தாரா? தன் மகளை மீட்டாரா? குழந்தையில் விடப்பட்ட கதிர் தனுஷ் என்ன ஆனார்? என்பதை படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் – நானே வருவேன் மோதல்:

ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் படம் மோதுகிறது என்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதோடு பல ஆண்டு கனவான பொன்னியின் செல்வன் படத்தோடு நானே ஒருவன் படம் மோதலா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர், நான் எந்த படத்துடன் போட்டியிடவில்லை. தமிழகத்துக்கும், தமிழ் திரையுலகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வெளியாகும் இரண்டு படங்களை ஏன் எல்லோரும் போட்டியாக பார்க்கிறீர்கள்?

-விளம்பரம்-

நானே வருவேன் தயாரிப்பாளர் அளித்த பேட்டி:

நவராத்திரி விடுமுறை குறிவைத்து தான் இந்த படத்தை வெளியிட முடிவு செய்தோம். மூன்று மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். அது மட்டும் இல்லாமல் தனுஷின் அசுரன் படம் நவராத்திரி விடுமுறையில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றதால் அதே செண்டிமெண்டில் தான் நானே வருவேன் படத்தையும் வெளியிட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பிரெஸ் மீட் ஒன்றில் பார்த்திபன் நானே வருவேன் படத்தை கேலி செய்துவிட்டதாக சர்ச்சை எழுந்து இருந்தது.

பார்த்திபன் விளக்கம் :

பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பார்த்திபன், திரிஷா பலரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அப்போது பார்த்திபன் அவர்கள், நானே வருவேன்! நானே வருவேன் என்று அடம்பிடித்து வந்தேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியது தனுஷ் படத்தை கலாய்த்து தான் கூறியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் வீடியோவை பயங்கர வைரலாக்கிவந்தனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள பார்த்திபன் ”நேற்று நானே வருவேன் என்று அழுத்திப்பேசியதை கலாய் என்று போட்டுவிட்டார்கள். நான் கலாய்க்கவெல்லாம் கிடையாது. நான் சினிமாவில் தீவிரமான ஒரு ரசிகன். எல்லா சினிமாவையும் ரசிப்பது என்னுடைய பழக்கம்’ என்று கூறியுள்ளார்.

Advertisement