‘உனக்கு மியூசிக் தெரியுமா’ – மேடையில் இன்சல்ட் செய்த இளையராஜா. முதன் முறையாக மனம் திறந்த பார்த்திபன்.

0
659
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக தனது இசையால் கட்டிப்போட்டு வைத்தவர் இசை ஞானி இளையராஜா. மேலும், இவர் எந்த அளவிற்கு புகழை பெற்று இருக்கிறாரோ அதே அளவிற்கு பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய பாடலை யாரும் அனுமதியில்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்றும் அப்படி பாடினால் அதற்கு உரிய ராயல்டி தர வேண்டும் என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் தனது இசையில் பல பாடல்களை பாடிய எஸ் பி பி கூட இனி தன் போது நிகழ்சகளில் பாடக் கூடாது என்று இளையராஜா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் இளையராஜா பல முறை பலரிடம் மிகவும் கடுமையாக நடந்தும் இருக்கிறார். கடந்த சில ஆண்டிகளுக்கு முன்னர் மேடையில் தண்ணீர் எடுத்த சென்ற பாதுகாவலரை திட்டி தீர்த்தார் இளையராஜா.

இதையும் பாருங்க : நான் யார் தெரியுமா ? எனக்கே சரக்கு இல்லையா ? போதை பத்தாமல் பிளாக்கில் சரக்கு கேட்டு ரகளை செய்த டாடி ஆறுமுகத்தின் மகன்.

- Advertisement -

தான் தண்ணீர் எடுத்து வந்ததாக கூறியும் அவரை இளையராஜா திட்டியதால் மேடையிலேயே அந்த பாதுகாவலர் இளையராஜாவின் காலில் விழுந்தார். அதே போல இளையராஜா 75 விழாவில் சங்கர் மற்றும் விக்ரம் மேடையில் இருந்தபோது நடிகை ரோகினி ,இசைஞானியிடம் எப்போது ஷங்கருடன் நீங்கள் பணியாற்றுவீர்கள் அதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று ஒரு சாதாரண கேள்வியைத்தான் கேட்டார்.

அதற்கு மிகவும் கடுப்பான இளையராஜா எனக்காக நீ வாய்ப்பு கேட்கிறாயா. இந்தக் கேள்வி மிகவும் தவறான கேள்வி என்று மிகவும் காட்டமாக பதில் அளித்தார்.மேடையில் இருந்த மிகவும் , விக்ரமும் செய்வதறியாது தர்ம சங்கடத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த வீடியோவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

அந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் பார்த்திபன், இளையராஜாவிடம் வயலினை கொடுத்து வாசிக்க கேட்ட போது ‘உனக்கு மியூசிக்க பத்தி தெரியுமா’ என்று இளையராஜா கேட்ட வீடியோவும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டதற்கு அவர் என்ன பதில் சொல்லியுள்ளார் என்பதை பாருங்கள்.

Advertisement