நான் யார் தெரியுமா ? எனக்கே சரக்கு இல்லையா ? போதை பத்தாமல் பிளாக்கில் சரக்கு கேட்டு ரகளை செய்த டாடி ஆறுமுகத்தின் மகன்.

0
464
DaddyArumugam
- Advertisement -

சமீபகாலமாக வில்லேஜ் ஃபுட் பேக்டரி என்ற யூடியூப் சேனல் மூலம் கலக்கிக் கொண்டிருப்பவர் டாடி ஆறுமுகம். இவர் திருப்பூரை சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே சமையல் செய்வது மீது ஆர்வம் இருந்ததால் இவர் ஆரம்பத்தில் மாமியா என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று நடத்தி வந்து இருந்தார். ஆனால், அது நஷ்டம் சந்தித்ததால் பின் கூலி வேலைக்கு சென்றார். அங்கு இருக்கும்போதே சின்ன சின்னதாக அசைவ உணவை சமைத்து வந்தார். இதனுடைய சுவை அருமையாக இருந்தால் தன்னுடைய மகன் கோபிநாத் அதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் வெளியிட்டார். பின் அதே வில்லேஜ் ஃபுட் பேக்டரி என்ற யூடியூப் சேனல் மூலம் தன் தந்தை சமைக்கும் அசைவ உணவுகளை பதிவிட்டு வந்தார். இதன்மூலம் டாடி ஆறுமுகம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் தற்போது டாடி ஆறுமுகம் 40 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்ட வில்லேஜ் ஃபுட் பேக்டரி நாயகனாக திகழ்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் அதிகம் அசைவ உணவுகளை சமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், டாடி ஆறுமுகம் தற்போது மதுரையில் டாடி ஆறுமுகம் என்ற பெயரில் 3 ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் டாடி ஆறுமுகத்தின் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்ற சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள புதிய போட்டியாளர் யார் தெரியுமா ? அட, இவரும் விஜய் டிவி பிரபலம் தானா ?

- Advertisement -

இவருடைய மகன் கோபிநாத் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ஆனால், இவர் பணியாற்றிய படங்கள் எதுவுமே வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின் சின்ன சின்னதாக தொழில்களை செய்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். முதலில் தமிழ் பேக்டரி என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். அதற்கு பிறகு தன் தந்தையின் சமையலை யூடியூப் சேனலில் போடலாம் என்று தி வில்லேஜ் ஃபுட் பேக்டரி என்ற ஒன்றை தொடங்கி மிக பிரபலமானார். வில்லேஜ் சமையல் டாடி ஆறுமுகம் சமையல் கலையை உலகுக்கு அறிமுகப்படுத்தி இன்று மாதம் லட்சக்கணக்கில் கோபிநாத் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கோபிநாத் ஞாயிற்றுக்கிழமை இரவு தன் நண்பர்களுடன் ஏகே டார்வின் என்ற மதுகூடத்துடன் கூடிய ஓட்டலுக்குச் சென்று இருந்தார். அங்கு முதல் இரண்டு பெக் உள்ளே போனதும் கோபிநாத் அங்கு வேலை செய்யும் ஊழியர்களை தகாத சொற்களில் பேசி வம்பிழுத்து இருக்கிறார். மேலும், இரவு 8 மணிக்கு சென்ற கோபிநாத் 11 மணி ஆகிய பின்பும் வெளியே வராமல் தகராறு செய்து இருக்கிறார். அங்கு உள்ள ஜார்ஜஸ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். போதையின் உச்சத்தில் இருந்த கோபிநாத், நான் யார் தெரியுமா? டாடி ஆறுமுகத்தின் மகன், எனக்கே சரக்கு இல்லையா? என்று கேட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் போதை முற்றி ஒரு கட்டத்தில் காலி பீர் பாட்டிலை உடைத்து ஜார்ஜசின் தலையில் அடிக்க பாய்ந்து இருக்கிறார் கோபிநாத். அதை தடுக்க முயன்ற ஜார்ஜஸ் கையில் காயம் ஏற்பட்டது. பின் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஜார்ஜஸ் சினாஸை பயங்கரமாக தாக்கி அங்கு இருந்த சேர், கண்ணாடி டேபிள் உள்ளிட்ட பல பொருள்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த தகவலறிந்த போலீசார் வந்தபோது அவர்களிடமும் கோபிநாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். பின் போலீஸ் கோபிநாத் மீது புகார் அளிக்கும் படி கூறி சென்விட்டார்கள். உடனே ஜார்ஜஸ் கொடுத்த புகாரின்படி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிநாத் அவர்கள் நண்பர்கள் ஜெயராம், தாமு ஆகியோரை தீவிரமாக போலீசார் தேடுகின்றனர்.

Advertisement