ஓத்த செருப்பு படத்திற்கு கிடைத்த விருது.. ஒற்றை காலில் மட்டும் செருப்பை அணிந்து சென்ற பார்த்திபன்..

0
2115
parthiban
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் வித்தியாசமான முறையில் கதைகளை கொடுப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகர் பார்த்திபன். இது மட்டும் இல்லைங்க இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும் உருவாக்கியவர். இவர் சினிமா உலகில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது தன்னுடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக “ஒத்த செருப்பு சைஸ் 7” என்ற படத்தில் நடித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருக்கிறார். இந்த படம் முழுவதும் அவர் மட்டுமே அதாவது வேறு எந்த ஒரு நபரின் முகமோ,உருவமோ தெரியாது. அதுவும் இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் நம்ப ‘அந்நியன் விக்ரம்’ போல மாறி, மாறி பேசி நடித்திருக்கும் காட்சிகள் திரையரங்குகளை அதிர வைத்தது என்று கூட சொல்லலாம். இதனால் ரசிகர்கள் அந்நியன் போல நம்ப பார்த்திபனும் மாறிவிட்டார் என்றும் கருத்துகளை தெரிவித்தனர்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன், சத்யா இவர்கள் இருவரும் அமைத்துள்ள இசைவேற லெவல்ங்க. இந்த படம் திரில்லிங், திகில், காமெடி கலந்த கலவையாக இருக்கிறது. மேலும், ஒரு சாதாரண நடுத்தர மனிதனின் எதார்த்தமான வாழ்க்கையை காட்டும் படமாக உள்ளது. “ஒத்த செருப்பு அளவு7” படம் இதுவரை யாரும் காணாத ஒரு அரிய முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் பார்த்திபன் தற்போது நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் சில வாரங்களுக்கு முன்பு தான் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இந்த படம் குறித்து இணையங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், ஒத்த செருப்பு படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களும், பல கருத்துக்களும் வந்த வண்ணம் உள்ளன. அதிலும், படம் வெளி வந்த அடுத்த நாளே படத்தை திருட்டுத்தனமாக இணையங்களில் பார்க்க தொடங்கினார் என்ற தகவலும் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பார்த்திபன் கோபப்பட்டு மனமுடைந்து இருந்தார். இந்த நிலையில் தான் ‘ஒத்த செருப்பு’ படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு ”வி அவார்ட்ஸ்” வழங்கியுள்ளார்கள்.மேலும், இவர் ஒத்த செருப்பு படத்தின் விருதை வாங்க நடிகர் பார்த்திபன் தன்னுடைய காலில் ஒத்த செருப்பு (ஷூ) அணிந்து வந்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

வித்தியாசமாக செய்வது தானே நம்ம பார்த்திபன் ஸ்டைல் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த மாதிரி புதுமையை நடிகர் பார்த்திபனால் மட்டும் தான் யோசிக்க முடியும் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு அவர்(ஒத்த செருப்பு சைஸ் 7 ) படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நடிகர் பார்த்திபன் நடந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள். மேலும், இவர் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக விருது வாங்கின புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டியும் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் ‘ஒத்த செருப்பு’ படமும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Advertisement