இந்தாள் உங்களையே மேடையில் வைத்து அசிங்கப்படுத்தியவர் தானே – இளையராஜாவிற்கு வாழ்த்து சொன்ன பார்த்திபனை கேட்ட நபர். பார்த்திபன் பதிலடி.

0
2528
parthi
- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இளையராஜா இன்று தனது 78 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதற்கு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் இசையமைப்பருமான பார்த்திபன் இளைராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அவருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இசையராசா குறித்து Skype-ல் சில வார்த்தைகள் பேச முடியுமா என்றார். SKY-ஐப் பற்றி
Skype-ல் பேசித் தீருமா?”-என்றேன்.

- Advertisement -

கண்ணுக்குள் கண்டுவிடும் பரப்பில்லை வானம்.
கண்டதையெல்லாம் ஒப்புக்கொள்வதுமில்லை நம் மனம்.என் ஞானத்திற்குள் அகப்படாத பெரும்பொருள் இசைஞானி.
தரை மார்க்கமாக மாநிலங்கள் கடக்கலாம்,
கடல் மார்க்கமாக அண்டை நாடுகள் கடக்கலாம்,
ஆகாய மார்க்கமாக கண்டங்கள் கடக்கலாம்-but
பக்தி மார்க்கமாகவே மாய சக்திகள் உணரலாம்.


உணராத ஒரு சக்தியை நான் பக்தியோடு பார்க்கிறேன்,அப்படியாவது அறிய முடிகிறதா என ஆராய்கிறேன்.அப்படி என் ஆராதனைக்குரியவர் பெரியவர் திரு இளையராஜா அவர்கள்.
(பக்தி= அகம் நோக்கி ஊர்தல்)
பிறந்த பயனையே அவரின் இசையால் அடைந்தவன்,பிறந்த நாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த?
ஆனாலும் ஏதேதோ சொல்ல முற்பட்டேனே…
அதுதான் அறியாமை என்பது என்று பதிவிட்டு இருந்தார்.

வீடியோவில் 18 : 42 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

பார்த்திபனின் இந்த பதிவை பார்த்த நெட்சன் ஒருவர், இந்தாள் உங்களையே மேடையில் வைத்து அசிங்கப்படுத்தியவர் தானே என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த பார்த்திபன், அவரே ஒரு மேடை, அவரே ஒரு அனுபவம் என்று கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விகடன் விருதுகளில் இளையராஜாவிற்கு விருது ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது மேடையில் தொகுப்பாளராக இருந்த பார்த்திபனிடம், உனக்கு மியூசிக்க பத்தி என்ன தெரியும் என்று கேட்டு கலாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement