தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தமிழ் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த படம் ‘டீன்ஸ்’.
இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து இருக்கிறது. ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர். மூடநம்பிக்கை, அறிவியல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை தான் பெற்று இருக்கிறது. இதை அடுத்து இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிகர் பார்த்திபன் பேட்டி
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பார்த்திபன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் அஜித் குமாரை வைத்து படம் இயக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பார்த்திபன், இப்போது வாய்ப்பு கொடுக்கும் கண்டிஷனில் அஜித்தும், வாய்ப்பு கேட்கிற கண்டிஷனில் நானும் இருக்கிறேன். நீ வருவாய் என படத்தில் நானும், அவரும் சேர்ந்து நடித்தோம். அந்த படத்தினுடைய போட்டோ ஷூட்க்காக நான் வரும் வரை அவர் காத்திருந்தார். அப்படித்தான் நான் அவரைப் பார்த்தேன். இன்றைக்கு அவர் ஹிமாலயா அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்.
அஜித் குறித்து சொன்னது:
பொதுவாக நான் யாரையுமே ரீச் பண்ணுவது இல்லை. அது ரொம்ப கஷ்டமான ஒன்று. ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை நான் பிரமாதப்படுத்துவேன். மேலும், தல படங்களிலேயே தலையாகிய படமாக இருக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வேன். தம்பி ராமையாவை வைத்து நல்ல படம் பண்ணும் போது தல அஜித் கிடைத்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். அதற்கு சரியான சூழல் அமைய வேண்டும்.
புது படம் அப்டேட்:
அதோடு என்னுடைய அசிஸ்டெண்டாக இருந்த எச்.வினோத் அவரை வைத்து படம் பண்ணும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். வாய்ப்பு கொடுக்கும் நிலைமையில் தான் அவரும் இருக்கிறார். என்றாவது அது நடந்தால் எனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார். அதை அடுத்து மீண்டும் நீங்கள் காமெடி ஜானரில் படம் பண்ணுவீர்களா? என்று கேட்டதற்கு, இரண்டு பாகங்களாக ஒரு கதையை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். ஆறு மாதத்திற்கு முன்பு மைத்திரி புரொடக்சன் இடம் அந்த கதையும் சொன்னேன். அவர்களும் அந்த கதையை ரொம்ப ரசித்து கேட்டார்கள்.
சூரி குறித்து சொன்னது:
மேலும், அந்த படத்தில் நிறைய காமெடி நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். சூரி இப்போது தான் ஹீரோவாக இருக்கிறார். அவர் ஹீரோ ஆவதற்கு முன்பே அவரை வைத்து படம் பண்ணலாம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அவரை வைத்து படம் பண்ண முடியாது. தற்போது அவர் எட்டு கோடி சம்பளத்தில் வேலை செய்கிறார். இருந்தும் நான் அவரிடம் நடிக்க கேட்டேன். ஆனால், அவர் வேறு படங்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டார். மேலும், வடிவேலு, சூரி இல்லாமல் மற்ற நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். கூடிய விரைவில் படத்திற்கான அப்டேட்களை கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார்