‘டீன்ஸ்’ படம் தொடர்பாக நடிகர் பார்த்திபன் வைத்திருக்கும் வேண்டுகோள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா துறையில் இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.
இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டீன்ஸ்’. இந்த படத்தை பயாஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர். கடந்த மாதம் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.
பார்த்திபன் வேண்டுகோள்:
இந்த படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இந்தியன் 2’ படமும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக பார்த்திபன் அவர்கள் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அவர்,
நண்பர்களே!
இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன். ஆனால், எனக்கு நீங்களே! இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் TEENZ ! 12/07/2024 அன்று முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள். சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள்- சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே களத்தில் நிற்கிறேன்.
நண்பர்களே!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 5, 2024
இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன் ஆனால்,
எனக்கு நீங்களே!
இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் TEENZ ! 12/07/2024 அன்று முதல்…
முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள்,சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள்-சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே… pic.twitter.com/S6IjH65QS7
நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை reservation தொடங்கிய உடனேயேக் காட்டுங்கள். நானே கமல் சாரின் தீவிர ரசிகன் தான். INDIAN -2-வை இருமுறை பார்த்து விட்டாவது நம் TEENZ-ஐ கண்டு கொள்ளுங்கள். TEENZ அனைவரும் INDIAN-ஐ பார்த்து பாராட்டி மகிழ வேண்டும். அதே போல INDIANs அனைவரும் TEENZ-ஐ! உளப்பூர்வமான இவ்வேண்டுகோளை மீறிய விளம்பரம் நானென்ன செய்திட முடியும்? இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு முதலில் share செய்யுங்கள் please என்று கூறி இருக்கிறார்.
இந்தியன் படம்:
கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘இந்தியன்’. இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, கஸ்தூரி, நிழல்கள் ரவி , அஜய் ரத்னம் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனை அடுத்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்தியன் 2 படம்:
இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். பல பிரச்சனைகளின் நடுவில் ‘இந்தியன் 2’ திரைப்படம் மீண்டும் தொடங்கி இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த படம் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.