தனது ஜாதிப்பெயரை நீக்கிய ஜனனி – பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதிப்பெயர் குறித்து கேட்ட ரசிகருக்கு அஜித் பட நடிகை பதில்.

0
940
parvathy
- Advertisement -

பொதுவாக நடிகைகள் சிலர் தங்கள் பெயருக்கு பின்னால் தங்கள் ஜாதி பெயரை வைத்துக்கொள்வது வாடிக்கையான ஒன்றாக தான் இருந்து வருகிறது. தமிழ் நடிகைகளை விட கேரள நடிகைகள் தான் தங்கள் பெயருக்கு பின்னால் தங்களது ஜாதியின் பெயரை போட்டுக்கொள்வார்கள். லட்சுமி மேனன், ரகுல் ப்ரீத் சிங், பார்வதி மேனன், நித்யா மேனன், பார்வதி நாயர், ஐஸ்வர்யா மேனன் என்று பலர் இந்த லிஸ்டில் அடங்கும். சமீபத்தில் நடிகை ஜனனி ஐயர் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்ற தனது ஜாதிப் பெயரை நீக்கியது பலரின் பாராட்டை பெற்றது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதிப் பெயர் குறித்து கேட்ட ரசிகருக்கு நடிகை பார்வதி நாயர் பதில் கொடுத்துள்ளார். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அருண்விஜய்யின் மனைவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

இதையும் பாருங்க : 22 ஆண்டுக்கு முன்னும் தற்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட வனிதா – அப்போவிட இப்போ தான் நல்லா இருக்காங்க.

- Advertisement -

தனது முதல் படத்திலேயே அஜித் படத்திலேயே நடித்த அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்திருந்தது. என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர், இவரிடம் உங்கள் பெயருக்கு பின்னால் ஏன் நாயர் என்று வைத்துளீர்கள், அது ஜாதிப் பெயரா ? என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பார்வதி நாயர், என்னை பொறுத்த வரை இப்போதும் எப்போதும் என் பெயர் பார்வதி நாயர் தான். ஜாதிக்கு எப்போதும் நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். பார்வதி நாயர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று ஆதரவாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement