உனக்கு கேள்வி கேட்க தெரியுதா – பார்வதியை கழுவி ஊற்றிய ரசிகர்கள். கடுப்பாகி பார்வதி கொடுத்த பதில்.

0
38906
parvathy
- Advertisement -

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். அதே போல இவரை பலரும் பிரபல ஆபாச பட நடிகை மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருவதும் வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

அதே போல இவர் எடுக்கும் சில பேட்டிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகி விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படம் குறித்து மாறி செல்வராஜை பேட்டி கண்டார். அந்த பேட்டியில் ‘கர்ணன்’ படம் பற்றி மாறி செல்வராஜிடம் கேட்ட கேள்விகளால் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த பேட்டியில், எனக்கு டீசரை பார்க்கும் போது ஒரு பௌத்த சமய அடையாளம் கொண்ட ஒரு முகமூடி விஷயங்களை நீங்கள் காண்பித்து இருந்தீர்கள். நிறய நீங்கள் நாட்டார்களின் பெண் தெய்வங்களை போஸ்டரில் காண்பித்து இருந்தீர்கள். இத என்னவாக புரிந்துகொள்வது என்று கேள்வியை முன் வைத்தார். அதற்கு பதில் அளித்த மாறி செல்வராஜ்’மறுபடியும் மறுபடியும் இந்த கேள்வியை எல்லாரும் கேட்கிறார்கள் ஆனால் கேள்விகளால் சினிமாவை புரிய வைக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் பதிலளிக்கிறேன் என்றால் அது என்னுடைய புரிதல் தான். ஆனால், மக்களுக்கு சென்று அடைந்தவுடன் அது மக்களின் புரிதல். எனவே, படம் பார்த்துவிட்டு பின்னர் வரும் கேள்விகளை பற்றி நாம் பேசலாம் அது தான் சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் பார்வதியின் இந்த பேட்டிக்கு கீழே ரசிகர் ஒருவர் ‘ஏண்டா அந்த பார்வதியை எப்போ பாத்தாலும் திட்டிட்டே இருக்கீங்க’ என்று ஒருவர் கமெண்ட் செய்ய, அதற்கு இன்னொருவர் பார்வதி ஒரு Bitch என்று மோசமாக கமண்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த கமண்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்வதி அடங்குங்க ஆதிக்கவாசிகளே என்று பதிவிட்டுள்ளார். பார்வதியின் இந்த பேட்டி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமண்டில் பதிவிடுங்கள்.விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால், வெறுப்பை கக்குவது மிகவும் மோசமானது. இது குறிப்பாக எனக்கு மட்டும் நடைபெறுகிறது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் சாதாரணமாக மோசமான கமெண்டுகளை செய்வது ஆன்லைன் துன்புறுத்தல் தான். என்னை பிடிக்கவில்லை என்பதற்காக சாதாரணமாக நீங்கள் தேவையில்லாமல் கமன்ட் செய்ய முடியாது.

மேலும், கர்ணன் பற்றி புரிந்துகொண்டேன். தயவு செய்து உனக்கு கேள்வி கேட்க தெரியவில்லை என்று கேவலமாக கமெண்ட் செய்ய வேண்டாம் . ஓபன் மைண்ட் இல்லாமல் இருந்தால் என்னுடைய புரிதல் பற்றி புரியாது. நான் என்ன கேள்வி கேட்கிறேன் என்னுடைய சிந்தனை என்ன என்பதும் புரியாது. கொஞ்சமாவது வளருங்கள் என்று பதிவுட்டுள்ளார். மேலும், பெண்கள் கேள்வி கேட்பதை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையா. ஆரோக்யமாற்ற இந்த செயல் என்னை எரிச்சலடைய செய்கிறது என்றும் பதிவிடுள்ளார் பார்வதி.

Advertisement