சினிமாவில் நடித்த சின்ன குழந்தை கதாபாத்திரங்கள் சில ஆண்டுகள் கழித்து நாம் காணும் போது இவர்களா அது என்று நாம் ஆச்சர்யப்படும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் ‘பசங்க’ படத்தில் நடித்த சிறுவனை தற்போது நீங்கள் பார்த்தல் அசந்து போவீர்கள். தற்போது ஹீரோவாக வேறு நடிக்க போகிறாராம்.
So… happy to introduce
P.K Vasudevan alias ‘Vasu’, eager to watch the romance between him and my ‘Radha’ … pic.twitter.com/CyWnfmMw9p— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) June 13, 2018
இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பசங்க’. சிறுவர்களை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தான் நடிகர் விமலும் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் விமலின் தம்பியாக நடித்திருந்த சிறுவனின் பெயர் கிஷோர். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைத்தது. அந்த படத்திற்கு பின்னர் ‘துரோகி, கோலி சோடா, நெடுஞசாலை’ போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது அந்த படத்தில் கிஷோர் தான் நடிக்கப்போகிறாராரம். இந்த முறை குழந்தை நட்சத்திரமாக இல்லை கதாநாகனாக நடிக்க போகிறாராம். இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.