தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். ஆனால், இவர்கள் எல்லாம் தற்போது இளம் ஹீரோயினி ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார்கள். அதே போல தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சில குட்டி பசங்க கூட இப்போ அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டனர்.
சமீபத்தில் கூட காக்க முட்டை படத்தில் நடித்த விக்னேஷ்ஷின் சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதை பார்த்த பலரும் இந்த பையனாப்பா இப்படி வளந்துட்டாரு என்று ஆச்சரியப்பட்டனர். அந்த வகையில் ரசிகர்களை சமீபத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் பசங்க படத்தில் ஜீவாவாக நடித்த குட்டிப் பையன் ஸ்ரீ ராம். தமிழ் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தில் சிறு வயது ஜீவாவாக அறிமுகமானார் ஸ்ரீ ராம்
அந்த படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பசங்க’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தேசிய விருதை கூட வென்று இருந்தது. அந்த படத்தில் ஜீவாவாக நடித்து இருந்தார் ஸ்ரீராம். பசங்க படத்திற்கு பின்னர் தமிழ் படம் வேங்கை ஜில்லா கோலி சோடா போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். மேலும் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் கூட கமலின் ஆபிஸ் பாயாக நடித்திருந்தார் ஸ்ரீராம்.
இறுதியாக இவர் அன்பழகன் இயக்கத்தில் வெளியாகி இருந்த அடுத்தசாட்டை படத்திலும் நடித்திருந்தார். அடுத்த சாட்டை படத்தில் கூட இவர் பார்ப்பதற்கு சின்னப் பையன் போலத் தான் இருந்தார். ஆனால் சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தாடி மீசை நீளமான முடி என்று அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.