தமிழில் 2009 இல் விமல் நடிப்பில் வெளியான பசங்க என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷோபி கண்ணு. இவரது உண்மையான பெயர் வேகா தமோடியா.
இவர் பசங்க படத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்திருப்பார்.அந்த படத்தில் மிகவும் வெகுளியாக நடித்த இவர் அந்த படத்திற்கு முன்னாள் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அவரை பிரபலமாகவில்லை என்றாலவும் இவர் சோபி கண்ணு என்று சொன்னால்தான் பல பேருக்கு தெரியும்.
1985 இல் சாட்டிஸ்கரில் பிறந்த இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான்.தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் ஈடுபட்ட இவர் பின்னர் சரோஜா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத்தொடங்கினார். அந்த படத்திற்கு பிறகு ஹிந்தி,தெலுகு என ஒரு சில சுமாரான படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 2016 இல் ஹிந்தியில் வெளியான ஜெய் கங்காதால் என்ற படத்தில் நடிதத இவர் தற்போது படங்களில் எதுவும் நடிக்கவில்லை.தற்போது பார்ப்பதற்கு மிகவும் மாடர்ன் பெண்ணாக இருக்கும் வேகாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சோபி கண்ணா இது என்று அச்சர்யப்பட்டு வருகின்றனர்.