3000 வாங்கியவருக்கு 80000. நிர்பயா வழக்கு மிருகங்களை தூக்கிலிட்ட இவர் யார் தெரியுமா ?

0
12203
nirbayapawan
- Advertisement -

கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டா சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் ஜுவனைல் என்பார்கள் கைது செய்யப்பட்டார்கள். இதில் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

-விளம்பரம்-

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் ஜுவனைலின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. பின்னர்  2014 ஆண்டு இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பல ஆண்டுகாளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இறுதியாக இன்று 4 குற்றவாளிகளும் இன்று தூக்கிலடபட்டனர். இதனால் நாடு முழுவதும் பலரும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்து நிர்பயாவின் தாய் கூறுகையில், நீதி தாமதப்படுத்தப்பட்டது. ஆனால் மறுக்கப்படவில்லை. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் இன்று நீதி கிடைத்துள்ளது. இந்த நாளை இந்நாட்டின் மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நீதித்துறைக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மகள் திரும்ப வர மாட்டாள். அவள் எங்களை விட்டு பிரிந்ததில் இருந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இது அவளுக்காக தான். . எனது மகளின் புகைப்படத்தை கட்டி அணைத்து, இறுதியில் உனக்கு நீதி கிடைத்துவிட்டது என்று கூறினேன். இதேபோல் இந்தியாவின் மகள்களுக்கு எங்களின் சட்டப் போராட்டம் தொடரும். என்று உருக்கமாக கூறி இருந்தார்.

இந்தநிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட பணியில் ஈடுபட்ட அவரின் விவரங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அவருடைய பெயர் பவன் ஜல்லட் உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த இவருக்கு குற்றவாளிகளை தூக்கிலிட ஒருவருக்கு தலா 20,000 என மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது மேலும் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடபவன் ஜல்லட்டிற்கு தான் முதல் வாய்ப்பு வழங்கப் பட்டதாக சிறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

-விளம்பரம்-

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணமே மரண தண்டனையை நிறைவேற்றும் பணியை அவன் தனது முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டதே ஆகும். பவனின் தந்தை மற்றும் அவரது முந்தைய மூன்று தலைமுறையினரும் மரணதண்டனையை வழங்கும் பணியை தான் செய்து வந்துள்ளனர். அவர்களிடமிருந்து தூக்கு தண்டனையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்ற விவரங்களை கற்றுக் கொண்டிருக்கிறார் பவன். மேலும், இவர் தான் உத்தர பிரதேசத்தில் சான்றிதழ் பெற்ற தூக்கிலிடும் தொழிலை. மீரட் சிறையில் மாதம் 3000 சம்பளம் பெற்று வந்தார்.

Image result for pawan jallad image

மேலும், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாதாரணமாக வசித்து வரும் பவன் தனது அன்றாட வாழ்க்கையில் கடினமான பொருளாதார சூழலை தான் எதிர் கொண்டு வந்திருக்கிறார். மேலும் அவரது பணி எப்போதும் நன்றாக இருப்பதாகவும் பணியில் அவர் சிறு பிழையும் செய்யும் வாய்ப்பு இல்லை என்பதாலும் தான் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடபவன் ஜல்லட்டிற்கு தான் முதல் வாய்ப்பு வழங்கப் பட்டதாகசிறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

Advertisement