குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும் என்று பவன் கல்யாண் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவரை ‘பவர் ஸ்டார்ட்’ என்று தான் அழைக்கிறார்கள்.
இவர் தனது நேர்மையான நடிப்பிற்கும் துணிச்சலான ஆளுமைக்கும் காரணமாக எண்ணற்ற ரசிகர்களை கொண்டு இருக்கிறார். தற்போது பவன் கல்யாண் அவர்கள் உஸ்தாத் பகத்சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் திரை உலகில் விஜய் நடிப்பில் வெளிவந்திருந்த தெறி படத்தின் ரீமேக். இந்த படத்தை ஹரிசங்கர் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
பவன் கல்யாண் திரைப்பயணம்:
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து தற்போது பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ப்ரோ. இந்த படம் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்திருந்த ‘வினோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக ஒடிடியில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
ப்ரோ படம்:
தற்போது இந்த படத்தை தான் ப்ரோ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். மேலும், தமிழில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா நடித்த கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றார்கள். தெலுங்கு சினிமாவிற்கு ஏற்றவாறு இந்த படத்தில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பிரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
பவன் கல்யாண் அளித்த பேட்டி:
அப்போது நிகழ்ச்சியில் பவன் கல்யாண், தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் தான் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. தெலுங்கு சினிமா இன்று செளிப்பாக இருப்பதன் காரணம் இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி மக்களையும் ஏற்றுக் கொண்டது தான். எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும் போது தான் அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்குள்ளே அடைத்து விடும்.
தமிழ் சினிமா குறித்து சொன்னது:
சமுத்திரகனி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கு படங்களை இயக்குகிறார். ப்ரோ படத்தில் கூட பல மொழி பேசும் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்களை மட்டும் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புது விதியை குறித்து நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளிய வரவேண்டும். அப்போதான் ஆர்ஆர்ஆர் போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமா தர இயலும் என்று பவன் கல்யாண் கூறியிருந்தார். இப்படி இவர் பேசியதற்கு காரணம், தமிழ் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சமீபத்தில் ஒரு புது விதியை அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.