ஹீரோயினாக அறிமுகமான பவித்ரா, நடராஜன் பதிவிட்ட பதிவு. ரசிகர்கள் செய்த அட்வைஸ்.

0
3963
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உலகில் பல முன்னணி வீரர்களை தனது பந்து வீச்சில் வீழ்த்திய நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வானார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்த நடராஜன் தனது முதல் ஒரு நாள் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் விளையாடி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

-விளம்பரம்-

இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் நெட் பவுலராக இணைந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடினார். இந்த போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நடராஜனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. தனது சொந்த ஊர் சின்னப்பம்பட்டி திரும்ப இருந்த நடராஜனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்படி ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் நடராஜன் சமீபத்தில் புதிய படத்தின் பூஜை புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தமிழில் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்த சதிஷ் தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளது. விஜய்யின் பபிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனத்தின் 21 வது படமான இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக்கு வித் கோமாளி பவித்ரா நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடராஜன் வாழ்த்து தெரிவித்தார். நடராஜனின் இந்த பதிவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ‘படங்களை ப்ரோமோஷன் செய்வதர்க்கு பதிலாக கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துங்கள்’ என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement