ஆள் இன் ஆள் அழகுராஜா படத்தில் வருவது போல, காஜல் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து பல கோடி பணத்தை பறிகொடுத்த மக்கள்.

0
515
kajal
- Advertisement -

காஜல் அகர்வால் நடித்த ஆள் ஆன் அழகுராஜா படத்தின் ஒரு காட்சியில் காஜலின் விளம்பரத்தை நம்பி மக்கள் பணத்தை முதலீடு செய்து பின்னர் ஏமார்ந்து விடுவார்கள். தற்போது அதே போல ஒரு சம்பவம் நிஜத்திலும் நடந்து இருக்கிறது. சமீப காலத்தில் குறைந்த நேரத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி கிரிப்டோ கரன்சி, டிரேடிங் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து மக்கள் பல லட்சங்களை இழந்து வரும் நிலையில் தற்போது தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகளின் மூலம் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி 5000 பேரிடம் 200 கோடிக்கும் மேல் பணத்தை ஏமாற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

சென்னை மற்றும் கோவையில் அமைத்துள்ள இந்த Hashape நிறுவனம் முதலில் TCX என்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி MLM என்ற அடிப்படையில் ஆட்களை சேர்ந்து வைத்தால் கமிஷனாக ஒரு தொகை தரப்படும் என்று ஆசை காட்டியுள்ளனர். பின்னர் 1 லட்சம் முதலீடு செய்தால் 300 நாட்களில் சிறிது சிறிதாக அதிகரித்து 3 லட்சம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி சுமார் 200 கோடி மோசடி செய்துள்ளதாக சென்னை காவல்ததுறை ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளார்.

- Advertisement -

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல், கர்நாடகம், ஆந்திர, போன்ற பிற மாநிலங்களிலும் இதனை போன்று பல ஆயிரம் மக்களை ஏமாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறிய நிலையில் இந்த Hashape என்ற நிறுவனத்தின் அதிகாரியாக இருந்த இம்ரான், பாபு, ஜெயின்,ஹித்தேஷ், போன்றவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டுவதாகவும், கொலை செய்து விடுவோம் என்று கொலைமிரட்டல் விடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் விலை அதிகமாக இருந்த TCX என்ற கிரிப்டோவில் முதலீடு செய்திருப்பதாக கூறிய அவர்கள் பின்னர் அவர்களே உருவாக்கிய ஒரு coinனில் முதலீடு செய்திருப்பதாக மாற்றி மாற்றி பேசுயுள்ளனர். மேலும் தற்போது திரையுலகில் பிரபலமான நடிகைகளாக வலம் வரும் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் போன்றவர்களை தொகுசு விடுதிகள், சொகுசு கப்பல்கள் போன்றவற்றில் நிகழ்ச்சிகளை நடத்தி இந்த Hashape என்ற நிறுவனத்தை விளம்பர படித்தியத்தினால் பலரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போது பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுவதாகவும், தாங்கள் வட மாநிலத்தில் இருப்பதினால் மேனேஜரை பார்க்க முடியாது என்று கூறுவதாகவும், பணத்தை தர மறுப்பதாகவும் பணத்தை இழந்த மக்கள் தெரிவித்துள்ளார் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய பணத்தை மீட்டு தருமாறு சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் மோசடி செய்த தொகை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எணிக்கையை அடிப்படையாக கொண்டு Hashape நிறுவனத்தின் மீதான இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு துறைக்கு மாற்றப்படலாம் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement