கமலின் தேவர் மகன் குறித்த சர்ச்சைக்கு இயக்குனர் பேரரசு பேரரசு கொடுத்து இருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் ஜூன் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட மாரி செல்வராஜ் கூறியது, தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன். கமலஹாசனின் தேவர் மகன் படம் சாதி பெருமையை பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம்.

Advertisement

விழாவில் மாரி செல்வராஜ் சொன்னது:

தேவர் மகன் பார்க்கும்போது ஏற்பட்ட வலி, அதிர்வுகள் என எல்லாமே இருக்கிறது. தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை வம்புக்கு இழுத்து இருக்கிறார் மாரி செல்வராஜ். இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் பேசியது குறித்து கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள்.

தேவர் மகன் படம் குறித்த சர்ச்சை:

தற்போது மாரி செல்வராஜ் கூறிய கருத்துக்கள் தான் இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னொரு பக்கம் மாரி செல்வராஜூக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குனர் பேரரசு கூறியது, மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமலஹாசனை இயக்குனர் மாரி செல்வராஜ் வசைப்பாடி இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், கமலஹாசனுக்கு இதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை, கோபமும் இல்லை.

Advertisement

இயக்குனர் பேரரசு கொடுத்த விளக்கம்:

கமல் அதற்கு எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. மாரி செல்வராஜை உயர்த்திப் பிடித்தே பேசி இருந்தார். அது அவருடைய பக்குவமாக இருக்கலாம். அதோடு மாரி செல்வராஜ், கமலஹாசன் என்ற நடிகரை சொல்லவில்லை. தேவர் மகன் என்ற படைப்பை தான் குறை கூறி இருக்கிறார். கமலஹாசன் நடித்த ஒரு படைப்பை குறிப்பாக தமிழகமே கொண்டாடிய ஒரு படத்தை மாரி செல்வராஜ் குறை சொல்லி இருக்கும்போது கமலஹாசன் அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால், கமலஹாசன் அதற்கு எந்த ஒரு பதிலையும் கொடுக்காத இருப்பது அதிசயமாக இருக்கிறது.

Advertisement

கமல் குறித்து சொன்னது:

பதில் கொடுப்பது ஒரு நல்ல கலைஞனின் கடமை. அவர் ஒரு அரசியல்வாதியாக இருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காகவும் சினிமா வியாபாரத்திற்காகவும் தான் அவர் வாயை மூடி இருந்திருக்கிறார். நாட்டு மக்கள் பலர் அந்த படைப்புக்காக பொங்கி எழுந்த போதும் அவர் அமைதியாகவே இருக்கிறார். கமலுக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கவலைப்படாதீர்கள். ஒரு படைப்பு புரிதல் இல்லாதவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கி விட்டதே என்று மட்டும் கவலைப்படுவோம். அதை புறம் தள்ளுவோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement