இளையராஜா விவகாரத்தில் கருத்து தெரிவித்த அமீருக்கு இயக்குனர் பேரரசு கண்டனம் ‌

0
285
- Advertisement -

இயக்குனர் அமீருக்கு, இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

-விளம்பரம்-

அதைத்தொடர்ந்து பெரிய பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதி ஆகியவற்றிற்கு சென்று இளையராஜா சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆண்டாள் கோவில் கருவறைக்கு முன்புள்ள அர்த்த ஆண்டாள் செல்ல முயன்ற இளையராஜாவை அங்குள்ள ஜீயர்களும், பக்தர்களும் தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்டது. அதாவது வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்பட்டது. அதனால் கோவில் அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியே வந்த இளையராஜா அங்கிருந்து சாமி தரிசனம் செய்தார் என செய்திகள் வந்தன.

- Advertisement -

இளையராஜா வெளியேற்றப்பட்டாரா:

அதற்குப் பிறகு அங்குள்ள அர்ச்சகர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் என்றும் செய்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனால் இந்த சம்பவம் குறித்து இளையராஜா வருத்தம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை இணையத்தில் தெரிவித்து வந்தார்கள். அதோடு, கோவில் நிர்வாகம், ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இளையராஜா பதிவு :

இப்படி அனைவரும் இளையராஜாவுக்காக கொந்தளித்த நிலையில், இது தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்’ என்று பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார்.

-விளம்பரம்-

கொந்தளித்த அமீர்:

சூழல் எப்படி இருக்க, இயக்குனர் அமீர் அவர்கள் வைத்திருந்த வாட்ஸப் ஸ்டேட்டஸ் தான் இணையத்தில் தீயாய் பரவியது. அதில், ‘இந்திய நாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசைஞானி ஆக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை. சனாதானம் தலை விரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போதும் மலரும்? என்று கேட்டிருந்தார்.

பேரரசு கண்டனம்:

சமாதானம் குறித்து இயக்குனர் அமீரின் வாட்ஸப் ஸ்டேட்டஸுக்கு இயக்குனர் பேரரசு தற்போது கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதில், இயக்குனர் அமீர் அவர்கள் நடக்காத ஒரு நிகழ்வுக்கு பதில் போடுவது தேவையில்லாத ஒன்று. அமீர் இஸ்லாத்தில் பற்று உள்ளவர் என்பது ஊரறிந்த விஷயம். இஸ்லாத்தில் எத்தனையோ குறை இருக்கும். அதை சுட்டிக்காட்டி உங்கள் வீரத்தை காட்டுங்கள். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடுங்கள். பின், சனாதனத்தைப் பற்றி பேசலாம்’ என்று பேரரசு கடுமையாக கட்டணம் தெரிவித்துள்ளார்.

Advertisement