பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட பேனர் – அதிகாரிகளுக்கு அடுத்த நடந்தது என்ன தெரியுமா?

0
476
hraja
- Advertisement -

பெரியார் சிலை தொடர்பான விவகாரங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் காரைக்குடி நகராட்சியில் பெரியார் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து அந்த இடத்தில திமுக கட்சியை சேர்ந்த கொளத்தூர் மணி செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சியில் இளங்கோவன் என்பவர் புதிய வீடு ஒன்றை தன்னுடைய இடத்தில் கட்டி அதற்கு தமிழ் இல்லாம் என்று பெயர் சூட்டியுள்ளார். இவர் ஒரு பெரியார் வாதி அதோடு திராவிடர் விடுதலை கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். மேலும் இளங்கோவன் தன்னுடைய வீட்டின் சுற்றுச்சுவர் அருகே மார்பளவு உயரம் உள்ள பெரியார் சிலை ஒன்றை சிறுவி இருக்கிறார்.

- Advertisement -

பெரியார் சிலை அகற்றம் :

இப்படி பட்ட நிலையில் தான் இளங்கோவன் அமைத்துள்ள பெரியார் சிலையை அகற்ற கோரி காவல்துறை மற்றும் வருவாய் துறையில் இருந்து வந்த அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் இந்த பெரியார் சிலையை அகற்ற இளங்கோவனும் பெரியார் வாதிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதையும் மீறி துணியை கொண்டு பெரியார் சிலையை மூடி அங்கிருந்து அகற்றியுள்ளனர் அதிகாரிகள்.

இளங்கோ கூறியது :

இப்படி பட்ட நிலையில் இந்த விஷயம் குறித்து இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் “என்னுடைய இடத்தில் அதுவும் சுற்று சுவருக்குள் அமைத்த பெரியார் சிலையை நீக்கியுள்ளார். இவர்கள் இப்படி செய்த்து யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் நடப்பதாக தெரிகிறது. பாஜகவை சேர்ந்த எச் ராஜாவின் வீட்டிற்கும் என்னுடைய வீட்டிற்கும் 1 கிலோ மீட்டர் தான் இருக்கிறது. ஒருவர் தனியார் இடத்தில் சிலை வைக்க நீதிமன்றத்தில் உரிமை இருக்கிறது என்று கூறினோம்.

-விளம்பரம்-

சட்டத்திற்கு எதிரானது :

அப்படி அகற்றினால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் கூறினோம். மேலும் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை வாசித்து காட்டியும் அவர்கள் ஏற்க மறுத்தனர். இதனையும் மீறி அவர்கள் சிலையை அகற்றியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் எனக் கூற அவர்கள் போங்க என்று கூறினார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறுபவர்கள் அதனை ஏற்படுத்தும் நபர்களிடம் சென்று பேசவேண்டும்.

சிலை இருந்த இடத்தில் பேனர் :

திமுக திராவிட மாடல் ஆட்சி நடித்துகிறது என கூறுகிறார்கள் ஆனால் இங்கே பெரியார் சிலை வைப்பதில் மோசமான நிலைமை இருக்கிறது என்று கூறினார்.இப்படிப்பட்ட நிலையில் தான் திராவிட விடுதலை கழக தலைவர் கொழுந்தூர் மணி இன்று பெரியார் சிலை அகற்றப்பட இடத்தில் பேனர் ஒன்றை நிறுவியுள்ளார். அந்த பேனரில் “இந்த இடத்தில இருந்த தந்தை பெரியார் சிலையை சட்ட வீரோதமாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அகற்றியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் :

மேலும் இதுதொடர்பாக வழக்கு தொடர இருப்பதாகவும் மீண்டும் சிலையை அந்த இடத்தில் நிறுவுவோம் என்று கூறியுள்ளனர். இப்படி பட்ட நிலையில் தான் அந்த சிலையை நீக்கிய இஸ்பெக்டர் மற்றும் அவருடன் சிலையை நீக்கிய வருவாய் துறை ஊழியர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement