தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக வைபவ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் பெருசு. இந்த படத்தை இளங்கோ ராம் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சுனில் ரெட்டி, சாந்தினி தமிழரசன், நிஹாரிகா முனிஷ்காஸ்த், பாலசரவணன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஊரில் பெருசு என்பவர் மதிப்பும் மரியாதை உடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய பிள்ளைகள் தான் சுனில், வைபவ். ஒரு நாள் பெருசு ஆற்றில் குளித்துவிட்டு வீடு வந்து கொண்டிருக்கும் போது பெண்கள் குளிப்பதை ஒரு இளைஞன் பார்த்து விடுகிறார். இதை பார்த்த பெருசு பயங்கரமாக கோபப்பட்டு அந்த இளைஞனை அறைந்து அறிவுரை சொல்லிவிட்டு சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பெருசு டிவி பார்த்துக் கொண்டே தூங்குகிறார் .
பின் தூங்கிப்படியே அவர் இறந்தும் விடுகிறார். ஆனால், இவர் இறக்கும்போது சொல்ல முடியாத ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை முடித்தால்தான் அப்பா இறந்ததையே வெளியில் சொல்ல முடியும் என்று நிலை வருகிறது. இதனால் வைபவ் மற்றும் அவருடைய அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் இருக்கிறார்கள். இறுதியில் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையை வைபவ் குடும்பம் தீர்த்தார்களா? அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தின் தொடக்கத்தில் என்ன நடக்கிறது? என்றே புரியாமல் பார்வையாளர்கள் தடுமாறும் அளவிற்கு கதை செல்கிறது. அதற்குப்பின் இரண்டாம் பாதிக்கு மேல் தான் கதையே நன்றாக செல்கிறது. படத்தில் வைபவ், சுனில் உடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. அவர்கள் இருவருமே தன்னுடைய நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, முதல் பாதியில் வைபவ் குடிகாரனாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.
இவர்களை அடுத்து படத்தில் வரும் பால சரவணன், முனிஸ்காந்த் ஆகியோர் காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் சில நடிகர்கள் கேமராவை பார்த்து நடிப்பதால் செயற்கை தனமாக இருக்கிறது.
ஒரு வீட்டுக்குள்ளேயே இயக்குனர் படத்தை முடித்து இருக்கிறார். படம் முழுக்க பிணத்தை சுற்றியே கதை நகர்கிறது. எப்படியாவது அடக்கம் செய்ய வேண்டும் என்று மொத்த குடும்பமே போராடுகிறது. நிறைய குழப்பங்களுக்கு இடையே காமெடியும் வந்து செல்கிறது. ஆனால், டெக்னிக்கல் டீம் நன்றாக இருக்கிறது.
மொத்தத்தில் ரொம்ப சுமாரான படமாக தான் இருக்கிறது.
நிறை:
படத்தினுடைய கதைக்களம்
சுனில், வைபவ் நடிப்பு
கிளைமாக்ஸ் ஓகே
டெக்னிக்கல் டீம் நன்றாக இருக்கிறது
குறை:
ஒரு வீட்டையே சுற்றி கதை நகர்கிறது
படத்தைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறையவே கவனம் செலுத்தியிருக்கலாம்
சில நடிகர்களுடைய நடிப்பு சேர்க்கை தனமாக இருக்கிறது
காமெடிகள் பெரிதாக இல்லை
மொத்தத்தில் பெருசு – அனுபவம் இல்லை