பெட்ரோல் பங்க்கில் இருப்பவர் என்னை அவமானபடுத்தினர். நடிகர் பரத் உருக்கம்.

0
36977
bharath
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் பரத். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடன திறமையும் கொண்டவர். நடிகர் பரத் அவர்கள் பாய்ஸ் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் . இதனை தொடர்ந்து காதல், எம்டன் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். சில வருடங்களாகவே இவருடைய படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்து வந்தது. இதனால் நடிகர் பரத் அவர்கள் ரொம்ப மன வேதனையில் இருந்தார். தற்போது இவர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் நடித்த படம் “காளிதாஸ்”. இந்த படத்தில் பரத் அவர்கள் காவல்துறை அதிகாரியாக நடித்து உள்ளார். மேலும், ஆக்ஷன், திரில்லர், பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் பரத் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் பல ஆண்டு காலமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சந்தித்த அனுபவத்தை குறித்து கூறி உள்ளார். வலி என்ற ஒன்று எனக்கு அடித்து அடித்து பழகிப் போய்விட்டது. முதல்ல ஏதாவது ஒரு சொத்தை எங்கப்பா எனக்கு சேர்த்து வைத்து இருந்தாருன்னா நான் படத்தை தயாரித்து இருப்பேன். என்னுடைய சகோதரர் யாராவது இருந்து இருந்தால் படத்தை இயக்கி இருப்பார்கள். இல்லைன்னா நான் பிசினஸ் பண்ணி இருந்தா அதை வைத்து பெரிய ஆளாக மாறி இருப்பேன். அதுவும் இல்லன்னா நல்ல படிச்சிருக்கணும். நான் என்னுடைய படிப்பை பாய்ஸ் படத்தில் நடிக்கும் போதே விட்டு விட்டு சினிமாவுக்கு வந்து விட்டேன். இப்படி எந்த ஒரு பின்னணி இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது என்பது ஒரு கஷ்டமான விஷயம் தான்.

- Advertisement -

நான் முழுக்க முழுக்க சினிமாவை மட்டும் தான் நம்பினேன். மேலும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என்னை நம்பினார்கள். சினிமாவில் காத்திருந்தால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும். சினிமாவில் இருந்தால் தான் வெற்றி பெற வேண்டும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஆனால், பல பேர் என்னிடம் வேற எதையாவது செய் என்று சொன்னார்கள். நான் அந்த மாதிரி போகவில்லை. சினிமாவிலிருந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சினிமாவை விட்டு வெளியேற வில்லை. நான் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன். ஒரு முறை நான் பெட்ரோல் பங்க் போயிருக்கும்போது என்னிடம் ஒருவர் ஏன் நீங்கள் படம் எடுக்கறது இல்ல சார் என்று கேட்டாங்க. அந்த மாதிரி கேட்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இந்த மாதிரி பல பேர் பல விதமாக என்னிடம் கேட்டு உள்ளார்கள்.

வீடியோவில் 28 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அப்போ நமக்குள்ளே ஒன்னும் பண்ண முடியல என்ற வலி வேதனை இருக்கும். அதை எல்லாம் சினிமாவில் இருந்தால் தான் சாதிக்க முடியும். அதற்காக காத்திருக்க வேண்டும். பின் காத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் போது நாம் வெற்றியை எடுத்து கொள்ள வேண்டும். நான் நன்றாக நடனம் ஆடுவேன். ஆனால், நான் இதுவரை ஒரு பெரிய செட்டில் ஆடியது கிடையாது. அல்லு அர்ஜுன் பாடல், யாராவது ஒரு பெரிய ஹீரோ பாடல் பார்க்கும் போது நமக்கு இந்த மாதிரி ஒரு 20,30% கிடைக்கலையே என்று வருத்தப்பட்டு உள்ளேன். இது என்னுடைய 17 வருஷத்தில் கிடைத்த வேதனையா? கற்றுக்கொண்டதா? என்னை மெருகேற்றிய விஷயமா? என்று சொல்ல தெரியல என்று கூறினார். தற்போது இவர் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படம் ‘ராதே’. இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் 2020ல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக அறிவித்து உள்ளார்கள்.

Advertisement