ஒழுங்காக ஆடை அணிய சொன்ன ரசிகர்.! மோசமான புகைப்படத்தை பதிவிட்டு பதில் கொடுத்த பேட்ட நடிகை.!

0
1820
Malavika

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே யு மோகன் என்பவரின் மகள் ஆவார். ஆரம்பத்தில் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து வந்த இவர், ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். ஆனால், இவர் தமிழில் அறிமுகம் ஆனது என்னவோ சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலம் தான்.

இதையும் படியுங்க : காயம் உண்மை தான்.! விமான நிலையத்தில் கால் தாங்கி நடந்து செல்லும் வாட்சன்.! நெகிழ்ச்சியான வீடியோ இதோ.! 

- Advertisement -

இதுவரை மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். 26 வயதே ஆன இந்த இளம் நடிகை அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர்’கொஞ்சம் அடக்கமான பெண்ணை போல ஆடை அணியுங்கள் ‘என்று கமெண்ட் செய்திருந்தார். அந்த ரசிகருக்கு பதிலளிக்கும் விதமாக படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த அடக்கம் போதுமா என்று நக்கலாக கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

-விளம்பரம்-
Advertisement