காயம் உண்மை தான்.! விமான நிலையத்தில் கால் தாங்கி நடந்து செல்லும் வாட்சன்.! நெகிழ்ச்சியான வீடியோ இதோ.!

0
1910
- Advertisement -

கடந்த ஞாயிற்று கிழமை (மே 12) அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணி மோதியது. இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வாட்சனுக்கு பாராட்டுக்குள் குவிந்தது.

-விளம்பரம்-

https://www.facebook.com/StartCameraRollingAction2.0/videos/2425343851022475/

- Advertisement -

இந்த நிலையில் சென்னை அணியின் ஹர்பஜன் சிங் நேற்று வாட்சன் காலில் ரத்தக்கரையுடன் பேட்டிங் செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், வாட்சன் விளையாடிக் கொண்டிருக்கும்போது டைவ் அடித்து அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த காயத்தினை யாரிடமும் வெளியில் சொல்லாமல் ரத்தம் வர அவர் களத்தில் நின்ற படி சென்னையின் வெற்றிக்காக இறுதிவரை போராடினார். காயம்பட்ட அவர் வலியில் ஆடிக் கொண்டிருப்பது யாரிடமும் கூறவில்லை என்று பதிவிட்டிருந்தார் ஹர்பஜன்.

-விளம்பரம்-

ஆனால், பலரும் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டதை நம்பவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் முடிந்து தனது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு சென்ற வாட்சனை சிலர் வீடியோ எடுத்தனர். அதில் அவர் காலை தாங்கி தாங்கி பொறுமையாக நடந்து செல்கிறார். இதன் மூலம் அவரது காலில் காயம் ஏற்பட்டது உண்மை தான் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement