அரசு சம்மந்தபட்ட இடத்தில் பேட்ட படம் திருட்டு தனமாக ஒளிபரப்பு.!விஷால் புகார்.!

0
495
Petta-vishal

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இணையத்தில் வெளியிட தமிழக அரசிடம் தடை கோரியது படக்குழு. ஆனால், அத்தனையும் மீறி இப்படம் இணையத்தில் வெளியானது.

படம் இணையத்தில் வெளியானதால் பட குழுவும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். திருட்டு தனமாக படம் வெளியாவதை தடுக்க நடிகர் சங்கம் போராடி வரும் நிலையில் அரசு பேருந்தில் இப்படத்தை ஒளிபரப்பியுள்ளது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.

- Advertisement -

இதனை ட்விட்டர் வாசி ஒருவர் ட்விட்டரில் பதிவிட அதனை நடிகர் விஷால் தமிழக அரசிற்கும், முதலமைச்சருக்கும் டேக் செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement