சிக்ஸ் பேக்கை காட்ட படு மோசமான செல்ஃபீ புகைப்படத்தை வெளியிட்ட கோ பட நடிகை.!

0
12268
Pia-Bajpai
- Advertisement -

பொதுவாக நடிகைகள் என்றாலே தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருவார்கள். அந்த வகையில் தமிழில் கோ, கோவா போன்ற பல படங்களில் நடித்த பியா பாஜ்பாய் தட்டையான உடல் அமைப்பிற்காக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தின் மூலம் ரசிகர்களால் பரிட்சயமானார்.

இதையும் படியுங்க : ஓராண்டு நட்பை கொண்டாடிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.! அதுக்குன்னு இவ்வளவு கேவலமாவா.!

- Advertisement -

கோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கித்தில் வெளியான கோவா படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான அபியும் அனுவும்படத்திலும் நடித்திருந்தார்.

இதுவரை தமிழ் தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ள பியா பாஜ்பாய் , 2015 வெளியான ‘past is present ‘ என்ற ஒரு ஆங்கில படத்தில் கூட நடித்துள்ளார். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பியா பாஜ்பாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிக்ஸ் பேக் உடலை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். மேலும், இன்னும் முழுமையாக சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்றும் அதற்காக கடுமையாக உடற் பயிற்சிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் பியா.

பியா பாஜ்பாய் இறுதியாக ‘அபியும் அனுவும் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் இவருக்கு எந்த பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இல்லை. இருப்பினும் மாடலில் துறையில் ஈடுபட்டு வரும் பியா பாஜ்பாய் அடிக்கடி பல்வேறு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். விரைவில் இவர் ஒரு இந்தி படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது எனவே, அந்த படத்திற்கு தான் தற்போது இவர் தட்டையான உடல் அமைப்பிற்கு முயற்சித்து வருகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement