ஓராண்டு நட்பை கொண்டாடிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.! அதுக்குன்னு இவ்வளவு கேவலமாவா.!

0
1745
Bigg Boss Ayswarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா. இவர்கள் இருவரும் பிக் ிபாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஐஸ்வர்யா ‘தமிழிற்கு என் ஒன்றை அழுத்தவும் ‘ என்ற படத்தில் அறிமுகமானார். அதே போல யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர்கள் இருவருக்கும் பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதையும் படியுங்க : சரத் குமாரின் பேரனை பார்த்துளீர்களா.! ராதிகா வெளியிட்ட புகைப்படம்.! 

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஐஸ்வர்யா, தற்போது ஆரியுடன் ஒரு படம் மஹத்துடன் ஒரு படம் என்று நடித்து வருகிறார். அதே போல யாஷிகாவும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் யாஷிகா மற்றும் ஐவார்யாவின் நட்பு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நீ என்னுடைய வாழ்க்கையில் ஒளியேற்றி விட்டாய் ஐஸ்வர்யா!” எனக் குறிப்பிட்டு இருவரும்கட்டி அனைத்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டுள்ளார்.

யாஷிகாவின் இந்த பதவி பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷமடைந்த இதற்கு பதிலளித்துள்ள ஐஸ்வர்யா ”ஓய் பேபி லவ் யூ” என்று என்று பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர்களது நட்பு தொடர்வதை பார்த்து இவர்கள் இருவரது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இருவரும் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும். இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து கொண்டு தான் வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் நடு ரோட்டில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement