சன் டிவில பிச்சைக்காரன் படம் பாத்துட்டு இருக்கீங்களா? அதில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
4888
- Advertisement -

சினிமாவில் நடித்த நடிகர் நடிகைகள் பலர் ஒரு சில படங்களுக்கு பின்னர் அட்ரஸ் இல்லாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் இவரும் ஒருவர் தான். விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் நல்ல வசூலையும் படைத்திருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாட்னா .

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is satna-2.jpg

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். முதல் முதலில் 2015 ஆம் ஆண்டு வெளியான குருசில் ‘குரு சுக்கிரன்’ என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் நடிகை சாட்னா . கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கார்த்திக் , சாண்டா நடித்த பிச்சைக்காரன் படத்தை விநியோகிஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : விவேக்கின் கனவை நினைவாக்க விஜய் ரசிகர்கள் எடுத்துள்ள சபதம் – இதோ அதன் முதல் படி.

- Advertisement -

திருமணத்தின் போது சாட்னா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அந்த புகாரில் கார்த்திக் தங்களது மகளின் சினிமா வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார் என்று அந்த புகாரில் கூறப்பட்டது. ஆனால், சிறிது காலம் கழித்து அந்தப் புகார் திரும்ப பெறப்பட்டது. பின்னர் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களது திருமண வரவேற்பு நடைபெற்றது.

This image has an empty alt attribute; its file name is satna.jpg

திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தங்களது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சாட்னா. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு குழந்தைக்கு தாயான பெண் சினிமாவில் நடித்து வருகிறார் கடைசியாக தமிழில் கயல் சந்திரன் நடிப்பில் வெளியான திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement